தாதாசாகேப் பால்கே விருதுகள் (DPIFF) - 2024!

தாதாசாகேப் பால்கே விருதுகள்...
தாதாசாகேப் பால்கே விருதுகள்...

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இளம் திரைத்துறை சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் நேற்று மாலை பிரபல திரை நட்சத்திரங்கள் சூழ வெகு விமர்சையாக 2024க்கான (DPIFF) விருது வழங்கும் விழாவனது நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த் மாஸ்ஸி, நயன்தாரா, ஷாஹித் கபூர், ஆதித்யா ராய் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
உருளைக்கிழங்கு சாண்ட்விச்: தரமான Lunch Box Recipe! 
தாதாசாகேப் பால்கே விருதுகள்...

விருதுகளைத் தட்டியவர்களின் பட்டியல்:

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு பிரிவுகளின்கீழ் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களின் பட்டியல் வரிசையாக..

*சிறந்த நடிகர்: ஷாருக்கான் (ஜவான்)

*சிறந்த நடிகை: நயன்தாரா (ஜவான்)

*சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி vs நார்வே)

*சிறந்த இயக்குனர்: சந்தீப் ரெட்டி வங்கா (அனிமல்)

*சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர் (ஜவான்)

*சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): வருண் ஜெயின், (ஜரா ஹட்கே ஜரா பச்கேவின் தேரே வஸ்தே)

*சிறந்த வில்லன் நடிகர்: பாபி தியோல் (அனிமல்)

*சிறந்த தொலைக்காட்சி நடிகை: ரூபாலி கங்குலி (அனுபமா)

*சிறந்த தொலைக்காட்சி நடிகர்: நீல் பட் (கும் ஹை கிசிகே பியார் மெய்ன்)

*ஆண்டின் சிறந்த தொலைக்காட்சித் தொடர்: கும் ஹை கிசிகே பியார் மேயின்

*வெப் சீரிஸில் சிறந்த நடிகை: கரிஷ்மா தன்னா (ஸ்கூப்)

*திரைப்படத் துறைக்கு சிறந்த பங்களிப்பு: மௌசுமி சாட்டர்ஜி

*இசைத்துறையில் சிறந்த பங்களிப்பு: கே.ஜே.யேசுதாஸ்

ஜவான் மற்றும் அனிமல்:

தாதாசாகேப் பால்கே 2024 விருது வழங்கும் விழாவில் அதிகளவிலான விருதுகளைப் பெற்றத் திரைப்படங்கள் என்ற வரிசையில் பார்த்தால் ஜவான் மற்றும் அனிமல் என இவ்விரண்டு திரைப்படங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன.

ஜவான்
ஜவான்

ஜவான்:

இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான். உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ₹1000 கோடிக்கு மேல் தெரிக்கவிட்டு சாதனைப் படைத்தது இந்த திரைப்படம். இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக பார்த்தால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே இப்படம்  பெற்றிருந்தது.

இந்நிலையில் தாதாசாகேப் பால்கே 2024 ஆம் ஆண்டுக்கான விருதை  மூன்று பிரிவுகளின் கீழ் ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக ஷாருகான் பெற்றுளார். சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றிருக்கிறார். இது ஹிந்தியில் இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அனிருத் சிறந்த இசையமைப் பாளருக்கான விருதை பெற்றுள்ளார் என்பது கூடுதல் பெருமை.

அனிமல்
அனிமல்

அனிமல்:

டந்த ஆண்டு இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கிய படம் தான் அனிமல். இப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியான சமயங்களில் ரசிகர்களின் கடும் விமரசனத்தை சந்தித்தது இருந்தபோதிலும் இது ஒரு வெற்றிப்படமாகவே கருதப்பட்டது. வசூல்  ரீதியாக பார்த்தால் பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் ‘தாதாசாகேப் பால்கே 2024’ ஆம் ஆண்டுக்கான விருதை இரண்டு பிரிவுகளின் கீழ் இப்படம் பெற்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதை சந்திப் ரெட்டி வங்காவும் சிறந்த வில்லனுக்கான விருதை பாபி தியோலும் பெற்றிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com