நடன இயக்குநர் தினேஷ் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

நடன இயக்குநர் தினேஷ் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

தினேஷ் மாஸ்டர் நடிப்பில் உருவாகியுள்ள லோக்கல் சரக்கு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், பிரபல நடன இயக்குநர் தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் லோக்கல் சரக்கு. இதில் முக்கியமான வேடத்தில் யோகி பாபுவும், கதாநாயகியாக உபாசனா ஆர்.சியும் நடித்திருக்கிறார்.

நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், நடுத்தர குடும்பத்தலைவர் பொறுப்பில்லாதவராக இருந்தால், அந்த குடும்பம் எவ்வழியில் செல்லும் என்பதை அழுத்தமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும், இப்படத்தின் க்ளைமாஸ் பெண்கள் மன தைரியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதை மிக அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 26ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் சொல்லும் தத்துவம் என்ன தெரியுமா?
நடன இயக்குநர் தினேஷ் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் தொகுப்பாளரிடன் கூல் சுரேஷ் அத்துமீறி நடந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com