Pugazh Family
Pugazh Family

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த விஜய் டிவி புகழின் மகள்!

Published on

விஜய் டிவி புகழின் மகளுக்கு ஒரு வயதாகும் நிலையில், அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் காமெடியனாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் புகழ். பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்மூலம் மேலும் பிரபலமாகினார். இவரின் ரியாக்ஸனுக்கே தனி ரசிகர்கள் உள்ளனர்.

குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமான புகழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சிக்ஸர், கைதி, காக்டெயில், சபாபதி, மிஸ்டர் ஜூ கீப்பர், வலிமை போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஆகஸ்ட் 16 1947 படத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார். தற்போது கோலி சோடா Rising என்ற சீரிஸில் வில்லனாக நடித்து வருகிறார்.

எப்போதும் புகழை ஒரு காமெடியனாக பார்த்துவிட்டு இப்போது வில்லனாக பார்ப்பது வித்தியாசமாக இருந்தாலும், அவரின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாகவே ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே இவருக்கும் இவர் காதலியான பென்ஸிக்கும் திருமணம் நடந்தது. இவருக்கு ரித்தான்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தைக்கு அண்மையில்தான் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை புகழ் கோலாகலமாக கொண்டாடினார். இந்த விழாவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்புதான் உணவு ஆர்டர் எடுத்திருந்தது. இந்த நிலையில் புகழின் மகள் ரித்தான்யா சாதனை புரிந்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இதையும் படியுங்கள்:
நல்ல படங்களை கொடுக்கத் துடிக்கிறார் தனுஷ் - சொன்னது எந்த நடிகை தெரியுமா?
Pugazh Family

அதாவது அதிக நேரம் டம் பெல்லை தூக்கிய குழந்தை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 2 கிலோ டம் பெல்லை 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை படைத்துள்ளார். இதனை கின்னஸ் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிட்டது. அதாவது, “செப்டம்பர் 12 ஆம் தேதி காஞ்சிபுரத்தை சேர்ந்த ரித்தன்யா புகழேந்தி, 2 கிலோ டம்பல் வைத்திருக்கும் மிக நீண்ட நேரம் வைத்திருந்த குழந்தை" என்று பதிவிட்டிருந்தது. இதுதொடர்பான செய்திகள் வேகமாக பரவி வரும் நிலையில், புகழுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com