நல்ல படங்களை கொடுக்கத் துடிக்கிறார் தனுஷ் - சொன்னது எந்த நடிகை தெரியுமா?

Dhanush
Dhanush
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் கதாநாயகி, தனுஷ் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுபற்றிய கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீப காலமாக படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மெகா ஹிட் வெற்றியைப் பதிவு செய்தது. ராயன் திரைப்படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது மட்டுமின்றி, நித்யா மேனனுக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து இருவரது நட்புறவும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் உடனான நட்பு குறித்து சமீபத்தில் பேசிய நித்யா மேனன், சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு படத்திற்கு ஆக்கப்பூர்வமாகவும், தொழில் ரீதியாகவும் நான் என்ன செய்தாலும் தனுஷ் மதிக்கிறார். எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரிடையாக சொல்லி விடுவார். தனுஷ் சினிமாவில் மிகுந்த கவனமுடன் செயல்படக் கூடியவர். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார். அதோடு அதிகளவில் படங்களை இயக்கவும் விரும்புகிறார் தனுஷ்.

என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஊக்கம் பெறுவதாக என்னிடம் ஒருமுறை தனுஷ் கூறியுள்ளார். ஒருமுறை மூன்று விதமான கதைகளை என்னிடம் சொல்லி, இதைப் பற்றி எனது எண்ணத்தையும் கேட்டறிந்தார். அதோடு அந்தக் கதைகளை அவர் நிகழ்காலத்திற்கேற்ப மேம்படுத்தியும் வருகிறார். நாம் அனைவரும் நல்ல நடிகர்கள். நம்மால் இதனை நிச்சயமாக செய்ய முடியும். ஆகவே மக்களுக்கு நல்ல படங்களைக் கொடுக்க முயற்சி செய்வோம் என்று சொல்லக்கூடிய ஒரே நபர் தனுஷ் தான்.

எதையும் மிகவும் அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதர். இதற்காக மனதார நான் அவரைப் பாராட்டுகிறேன். இதுபோல் சக கலைஞர்களை மதிக்கக் கூடிய மற்றும் பாராட்டக் கூடிய நபர்களைக் காண்பது மிகவும் அரிதாகும். ஆகையால் தான் என்னால் முடிந்த அளவிற்கு தனுஷ் படங்களில் தொடர்ந்து நடிக்க முயற்சி செய்கிறேன்” என நித்யா மேனன் கூறியுள்ளார்.

Good Films
Nithya Menon
இதையும் படியுங்கள்:
முன்னேற்றப் பாதையில் மலையாள சினிமா!
Dhanush

சமீப காலங்களில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் மற்றும் ராயன் ஆகிய மூன்று படங்களுமே 100 கோடி கிளப்பில் இணைந்த திரைப்படங்கள். தொடக்கத்தில் சினிமாவிற்குள் நுழைந்த போது பலரும் தனுஷை கிண்டல் செய்தனர். ஆனால், இன்று 50 படங்கள் வரை நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்றால், அதற்காக அவர் உழைத்தது ஏராளம்.

நல்ல படங்களை கொடுக்கத் வேண்டும் என்ற எண்ணம் மிகவும் அற்புதமானது. அதற்கேற்ப இனி வரப்போகும் தனுஷின் படங்கள் நல்ல கருத்துகளை மட்டும் மக்களுக்கு சொல்லும் படியாக இருந்தால் மிகச் சிறப்பு தான்.

logo
Kalki Online
kalkionline.com