விடைபெறப்போகும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம்!

Delite Theatre.
Delite Theatre.

19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் சினிமா அறிமுகமான நாட்களில் கோவையில் வின்சன்ட் சாமிக்கண்ணு என்பவரால் கட்டப்பட்ட `வெரைட்டி ஹால்` என்றழைக்கப்பட்ட தற்போதைய Delite Theatre தான் தென்னிந்தியாவின் முதல் தியேட்டராகும். அந்த காலங்களில் கோவையில் சினிமா தியேட்டர்களும், ஸ்டூடியோக்களும் அதிகம் காணப்பட்டன.

குறிப்பாக அந்த சமையங்களில் கோவையில் மின்சாரம் அவ்வளவாக இல்லை. தொழிற்சாலைகளுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உதகையில் உள்ள நீர் தேக்கத்தின்மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தியே பிரிட்டிஷ் அரசு மின் விநியோகம் செய்தது. மக்களும் விளக்கு பயன்படுத்தியே வீடுகளை ஒளிரச்செய்தனர். அப்போது திரையரங்கிற்காக வெளிநாட்டிலிருந்து ஆயில் இஞ்சினை கொண்டுவந்து அதன்மூலம் மின் உற்பத்தி செய்து திரையரங்கு இருந்த சாலைகள் முழுவதும் ஒளியால் பிரகாசமாக்கினார் வின்சன்ட்.

அதன்பின்னர் 1950ம் ஆண்டிற்கு பிறகு திரையரங்கம் வேறொரு நபருக்கு விற்கப்பட்டது. அப்போதுதான் வெரைட்டி ஹால் என்ற பெயர் டிலைட் தியேட்டராக மாறியது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களின் திரைப்படங்கள் அந்த தியேட்டரில் வெள்ளி விழா கண்டுள்ளன. கருப்பு, வெள்ளையில் தொடங்கி கலர் படங்கள் வரை அங்கு திரையிடப்பட்டிருக்கின்றன. அதேபோல் தமிழ், ஹிந்தி போன்ற பல மொழி படங்களும் திரையிடப்பட்டன. பின் காலங்கள் செல்லச் செல்ல பழைய படங்கள் மட்டுமே மீண்டும் ரீரிலிஸ் செய்யப்பட்டன.

அந்தவகையில் இப்போது மல்டிப்பிளக்ஸ் திரையரங்குகளுடன் போட்டிப்போட முடியாமல் பல பழமையான திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும் உணவகங்களாகவும் மாறின. அதே நிலைமைத்தான் இப்போது டிலைட் திரையரங்கத்திற்கும் ஏற்பட்டுள்ளது. முன்னதாக பராமரிப்பு பணிகளுக்காக டிலைட் திரையரங்கின் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இப்போது முழுவதுமாக திரையரங்கம் இடிக்கப்படப் போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் இந்த இடம் விரைவில் வணிக வளாகமாக மாறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனைப் பற்றி பிரபல ஓவியர் ஜீவானந்தம்  கூறியதாவது, ”இந்த திரையரங்கம் வணிக வளாகமாகவே மாறினாலும் கோவை மக்களுக்கு இதன் மேல் இருக்கும் நினைவுகளை மட்டும் அழிக்க முடியாது. இருளிலிருந்த கோவையை முதன்முதலில் வெளிச்சமாக்கியது இந்த திரையரங்கம்தான். இதனால் இது எப்போதும் வரலாற்று சிறப்புமிக்க இடமாகவே கருதப்படும். இந்த தியேட்டர் தொடங்கி 110 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டு வரை இங்கு படங்கள் திரையிடப்பட்டுதான் இருந்தன.

இதையும் படியுங்கள்:
கருடனில் காதல் நாயகனாக கலக்கிய சூரி... வைரலாகும் பாடல்!
Delite Theatre.

இப்போது இதனை இடிப்பதற்கு பல பொருளாதார காரணங்களும் இருக்கலாம். ஆனாலும் இதை இடிப்பது வருத்தமாகத்தான் உள்ளது. பல பழமையான தியேட்டர்கள் இப்போது உணவகமாகவும், வணிக வளாகங்களாகும் மாறியுள்ளன. வருங்காலம் இந்த திரையரங்கின் சிறப்புகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். டிலைட் தியேட்டரின் நினைவாக ஒரு சின்ன தோரணவாயிலாவது அமைக்க வேண்டும்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com