

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் மிரள வைத்த திரைப்படம் ‘டிமான்டி காலனி’. அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது.
இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், சர்ஜனோ காலித், டோர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டிமான்டி காலனி மூன்றாவது பாகத்தில் அதே இருண்ட மற்றும் பயமுறுத்தும் சூழலை இயக்குனர் அஜய் ஞானமுத்து விரிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறையைக் குறிவைத்து, வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘டிமான்டி காலனி 3’ படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுவும் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகப்பெரிய ரெகார்ட் என கூறப்படுகிறது.
படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சியும், ஆடியோ உரிமையை டி சீரிஸ் சவுத் நிறுவனமும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு பாகங்களின் மாபெரும் வெற்றியே, மூன்றாவது பாகத்திற்கு இத்தகைய மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க முக்கிய காரணமாக அமைந்ததுடன், படத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்வது போல் அமைந்துள்ளதாக திரைதுறை வட்டாரங்கள் கூறுகின்றன.