விமர்சனம் டெவில்!

Devil Tamil movie Review
Devil Tamil movie Review
Published on
மனப்பேயின் வெளிப்பாடு டெவில்!(3 / 5)

மிஷ்கின் இசையில், ஆதித்யா இயக்கத்தில், விதார்த், பூர்ணா நடிப்பில் வெளிவந்துள்ள படம் டெவில். அலெக்ஸ் (விதார்த் )  மற்றும்  ஹேமா ( பூர்ணா) தம்பதிகள். இந்த இருவரும் திருமணம் தாண்டிய ஒரு பந்ததிற்குள் இருக்கிறார்கள். இந்த உறவு பிரச்சனையால் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலை ஏன்? யார் செய்தது என்ற உளவியல் திரில்லரில் கதையாக பயணம் செய்கிறது டெவில் படம்.

படம் தொடங்கியது  முதல் பல்வேறு ட்விஸ்ட்களுடன் செல்கிறது. குறிப்பிட்ட கதை மாந்தர்களை  மட்டுமே வைத்து கதை நகர்ந்தாலும் கதாபாத்திர உருவாக்கம் சிறப்பாக இருப்பதால் நம்மால் ரசிக்க முடிகிறது. திரில்லர் வகையில் பயணம் செய்யும் இப்படம் ஒரு கட்டத்தில் ஹாரர் வகைக்கு மாறி ரசிகர்களை பயமுறுத்துகிறது.

கார்த்திக் முத்து குமாரின் ஒளிப்பதிவும், S. இளையராஜாவின் படதொகுப்பும் இந்த பயமுறுத்தலுக்கு உத்ரவாதம் தருகிறது. மியூசிக் டைரக்டராக அவதாரம் எடுத்துள்ள இயக்குநர் மிஷ்கின் தான் மான சீக    குருநாதர் இளையராஜாவை போலவே இசை அமைத்துள்ளார். சில இடங்களில் எந்த பின்னணி இசையையும் தராமல் உணர்வுகளை கடத்துகிறார். பல இடங்களில் தனது குருவை போலவே வயலின் இசையை மிகப் பிரமாதமாக பயன்படுத்தி உள்ளார்.

விதார்த்தும், பூர்ணாவும் ஒரு நிஜ தம்பதி போல் சிறப்பாக நடித்துள்ளனர்.வித்தார்தின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும் நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துவது பூர்ணாதான். கணவன் மீது அன்பு, துரோகத்தின் போது கொந்தளிப்பு என இன்னும் பல உணர்வுகளை மிக சாதாரணமாக தரும் நடிப்பு ராட்சசியாக வாழ்ந்துள்ளார் பூர்ணா. படத்தில் பாராட்ட பல அம்சங்கள் இருந்தும் முடிவு தெளிவாக இல்லாதது ஒரு குறையே. 

இதையும் படியுங்கள்:
ஒரு ஊருக்கு ஒரே சமையலறையா? ஒன்றாக கூடி உணவருந்தும் மக்கள்!
Devil Tamil movie Review

பெரு நகரங்களில் உயர் நடுத்தர குடும்பங்களில் பெரியவர்களின் வழிகாட்டுதல் தேவையை இப்படம் சொல்கிறது. டெவில் படம்  ஒரு பாடம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com