ஒரு ஊருக்கு ஒரே சமையலறையா? ஒன்றாக கூடி உணவருந்தும் மக்கள்!

Chandhanki village
Chandhanki villageImge credit: Indian Daily post

chandanki village gujaratஇன்றைய Fast-food உலகத்தில் ஒரு போன் செய்தால் போது நமக்கு விருப்பமான உணவுகள் நேரடியாக வீட்டிற்கு டெலிவரி ஆகிவிடும். அதேபோல், சமையலறை என்பது இந்தகால தலைமுறையினருக்கு தேவையில்லாத விஷயமாக மாறிவருகிறது. இந்த சூழ்நிலையில்தான், குஜராத்தில் உள்ள மஹிசனா என்ற மாவட்டத்தில் உள்ள சந்தன்கி என்ற கிராம மக்கள் அனைவரும் ஒரே சமையலறையில் சமைத்து ஒன்றாக கூடி உணவருந்தும் வழக்கத்தை கடைப்பிடித்துவருகிறார்கள்.

சந்தன்கி கிராமத்தில் கிட்டத்தட்ட 300 குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் பலர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளனர். ஆகையால் இந்த கிராமத்தில் 55 வயது முதல்– 85 வயது வரை இருக்கும் பெற்றோர்கள் சுமார் 500 பேர் உள்ளார்கள். ஆகையால், எதற்கு ஒவ்வொருவரும் தனித்தனியாக சமைக்கவேண்டும். அனைவரும் பொதுவாக ஒரு சமுதாய சமையலறை இருந்த போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் கிராமவாசிகள். இதற்காக ஒரே ஒரு சமையலறை வைத்து நடத்தி வருகிறார்கள். அதேபோல் ஒன்றாக சேர்ந்து அனைவரும் உணவருந்துவார்கள்.இதனால் யாருக்கும் தனிமை என்பதே அறியாமல் அனைத்து கதைகளையும் பேசி நேரத்தையும் கழிக்கிறார்கள்.

வயதானவர்களால் சமையல் செய்யமுடியாத என்பதால், வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் அனுப்பும் பணத்தில், ஒரு சிறு தொகை சமையல் செய்பவர்களுக்கு 11 ஆயிரம் மாத சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதேபோல் கிராமத்து மக்கள் ஒருவர் சாப்பிட மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். தினமும் இரண்டு நேர சாப்பாடு வழங்கப்படும். மதியம் பருப்பு, சாதம், சப்பாத்தி, சப்ஜி, இனிப்பு பலகாரம் ஆகியவை வழங்கப்படும். அதேபோல் இரவு இட்லி சாம்பார், கோடா, டோக்லா, ரொட்டி, கிச்சடி ஆகியவை வழங்கப்படுகிறது.

பூனாம்பாய் படேல் என்பவர் நியூ யார்க்கில் 20 வருடங்கள் இருந்தப்பின் குடும்பத்தை அஹமதாபாத்தில் விட்டுவிட்டு இந்த கிராமத்திற்கு வந்து மக்களுக்கு உதவியாக இருக்கிறார். அவர் இந்த வழக்கத்தைப் பற்றி கூறும்போது, “ இந்த கிராமத்தில் உள்ள வயதான மக்கள் தினமும் ஒருமுறை தான் உணவருந்தி வந்தார்கள். ஆகையால் தான் இந்த திட்டம் உருவானது. இப்போது மதியமும் இரவும் திருப்தியாக சாப்பிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்போதும் உணவு மிஞ்சிவிடுவதால் மாலை நேரமும் அடுத்த நாள் காலையும் கூட அதனையே சூடு செய்து சாப்பிட்டுக் கொள்கிறார்கள்.” என்றார்.

இதையும் படியுங்கள்:
ரயிலை மறித்து நின்ற அன்னப்பறவை.. எதுவும் செய்யமுடியாத நிலையில் மக்கள்! வைரலாகும் வீடியோ..!
Chandhanki village

அதேபோல் 72 வயதான ரமேஷ் படேல் என்பவர் அஹமதாபாத்திலிருந்து சந்தன்கி வந்திருக்கிறார். இவரின் மகன் ஆஸ்திரேலியாவில் உள்ளார். இவர் இதைப்பற்றி கூறும்போது,  ‘இந்த கிராமத்தில் வயதானவர்கள் தான் அதிகம் உள்ளார்கள், இவர்களின் தனிமையைப் போக்கும் விதமாக ஒரே இடத்தில் கூடி சாப்பிடும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்னும் கொஞ்ச மாதங்களில் பூங்காவும் வந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com