பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, சமீப காலமாக அளித்து வரும் பேட்டிகளில் சினிமா பிரபலங்கள் குறித்த தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாகப் பேசி வருகிறார். இந்த வகையில், நடிகர் தனுஷுக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையே ஒரு இணக்கமான உறவு இல்லை என்பதை அவர் மீண்டும் வெளிப்படுத்தியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வருடங்களுக்கு முன் "சுச்சி லீக்ஸ்" என்ற பெயரில் பிரபலங்கள் குறித்த பல அந்தரங்கத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. அது தன் டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து வெளியிடப்பட்டவை என்று சுசித்ரா அப்போதே மறுத்திருந்தார். ஆனால், தற்போது அளித்து வரும் பேட்டிகளில், தனுஷ், சிம்பு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனப் பலரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சுசித்ரா பேசுவது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், " இந்த ப்ராங்க் கலாச்சாரம் பரவலாக திரைத்துறையில் இருந்து வருகிறது. அதில் அனைத்து நடிகர்களும் கலந்துக்கொள்கிறார்கள். தனுஷுக்கு சிம்புவை சுத்தமாகப் பிடிக்காது. ஆனால், டிஸ்கஷன் என்ற பெயரில் அவர்களும் கலந்து பேசிக்கொள்கிறார்கள். வெள்ளித்தட்டில்தான் போதைப் பொருட்கள் வைக்கப்படுகிறது. " என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனுஷ் ஒரு சைக்கோ என சிம்புதான் பலரிடமும் பரப்பியதாகவும் சுசித்ரா கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசித்ரா இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது கோலிவுட்டில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், இந்தப் பேட்டிகள் குறித்து தனுஷ், சிம்பு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, தனது தனித்துவமான குரலாலும், பாடல்களாலும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். பின்னணிப் பாடகியாக மட்டுமல்லாமல், வானொலி அறிவிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பன்முகத் திறமையைக் கொண்டவர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் அவர் சம்பந்தப்பட்ட சில சர்ச்சைகள், அவரைப் பற்றிய விவாதங்களை வேறு திசையில் திருப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.