நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமான 'ராஞ்சனா' (Raanjhanaa) திரைப்படம், 11 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், தனுஷ் பிறந்தநாளன்று ஏஐ க்ளைமக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராயின் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியது, திரையுலகில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் ஒரு முக்கியக் காட்சியின் க்ளைமாக்ஸ், தனுஷின் வேண்டுகோளையும் மீறி நீக்கப்பட்டதாக ஆனந்த் எல். ராய் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனுஷ் வெளிப்படுத்தியிருப்பது தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
2013-ம் ஆண்டு வெளியான 'ராஞ்சனா' திரைப்படம், தனுஷின் நடிப்புக்காக பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த கதைக்களமும், கதாபாத்திரங்களும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. ஆனால், படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும் ஒரு காட்சியை நீக்கியதும், ஏஐ க்ளைமக்ஸாக மாற்றியது குறித்தும் நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒப்புக் கொண்ட படம் இதுவல்ல; திரைப்படங்களையும், உள்ளடக்கங்களையும் ஏஐ உதவியுடன் மாற்றுவதென்பது கலைக்கும் கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். னிமாவின் மரபையும் இது அச்சுறுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தடுக்கும் விதமாக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராய், படத்தின் க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தனுஷும் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது திரையுலகில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.