
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் இடையிலான பந்தம்ங்கிறது வெறும் கணவன்-மனைவி உறவு மட்டும் இல்லை. அது ஒரு பெரிய தத்துவம். பிரபஞ்ச சக்தியோட ஒரு அடையாளம். அவங்க ரெண்டு பேருக்கும் இடையில நடந்த உரையாடல்கள், சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதிகள் இதெல்லாம் வெறும் புராணக் கதைகள் இல்லீங்க. அது உலக நியதியையும், தர்மத்தையும், வாழ்க்கைக்கான பல பாடங்களையும் நமக்கு சொல்லுது. அப்படி, இந்த பிரபஞ்சத்தையே ஒருங்கிணைச்சு வச்சிருக்கிறதா நம்பப்படுற 5 முக்கியமான வாக்குறுதிகள் என்னென்னனு இங்க பார்ப்போம்.
1. சிவன் பார்வதிக்கு கொடுத்த முதல் மற்றும் மிக முக்கியமான வாக்குறுதி, "நீ என் உடல், நீ என் சக்தி, நீயே என் ஒரு பாதி" என்பதுதான். அண்ணாமலை கோயிலில் அர்த்தநாரிஸ்வரர் ரூபத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் இணைந்திருப்பதை காணலாம். இது ஆண்-பெண் சமத்துவத்தையும், பிரபஞ்ச சக்தியின் சமநிலையையும் குறிக்குது. பார்வதி இல்லாம சிவன் இல்லை, சிவன் இல்லாம பார்வதி இல்லை. இந்த ஒருமைப்பாடுதான் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் (படைத்தல், காத்தல், அழித்தல்) இந்த மூணு செயல்களுக்கும் ஆதாரம்.
2. பார்வதி தேவி அடியார்களின் துயரங்களைப் பத்தி சிவனிடம் கேட்பார். அப்போ, சிவன் "யார் ஒருவர் என்னை உண்மையாக வழிபடுகிறார்களோ, பக்தியோடு என் நாமத்தை உச்சரிக்கிறார்களோ, அவர்களின் துயரங்களையும், பயத்தையும் நான் நீக்குவேன்" என்று வாக்குறுதி கொடுத்தார். இது பக்தர்களுக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் கொடுக்குது. சிவனோட கருணையை இந்த வாக்குறுதி உணர்த்துது.
3. பார்வதி தேவி கடும் தவம் செஞ்சு சிவபெருமானை அடைந்தாள். அப்போ சிவன், "யார் ஒருவர் உண்மையான பக்தியுடனும், விடாமுயற்சியுடனும் தவம் செய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்" என்று வாக்குறுதி கொடுத்தார். இது நம்ம வாழ்க்கையில எந்த ஒரு விஷயத்தை அடையவும், விடாமுயற்சியும், உண்மையான உழைப்பும் முக்கியம்னு சொல்லுது.
4. பார்வதி தேவி மரணத்தைப் பத்தி கேட்கும்போது, சிவன், "பிறப்பு, இறப்பு என்பது உடலுக்கு மட்டுமே. ஆத்மாவுக்கு மரணம் இல்லை. அது நித்தியமானது, அழிவில்லாதது" என்று வாக்குறுதி கொடுத்தார். இது வாழ்க்கையோட உண்மையான சாராம்சத்தையும், மரணம் ஒரு முடிவல்ல, ஒரு மாற்றம் என்பதை உணர்த்துது.
5. பிரபஞ்சத்துல தர்மம் குறையும்போதும், அதர்மம் தலைதூக்கும்போதும், சிவன் தலையிட்டு தர்மத்தை நிலைநாட்டுவார் என்று பார்வதிக்கு வாக்குறுதி கொடுத்தார். "சரியான பாதையில் செல்பவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன்" என்று உறுதி கூறினார். இது நீதியின் வெற்றியையும், அறத்தின் அவசியத்தையும் வலியுறுத்துது.
இந்த 5 வாக்குறுதிகள் வாழ்க்கைக்கு தேவையான ஆழமான தத்துவங்களையும், பிரபஞ்சத்தோட அடிப்படை சக்திகளையும் நமக்கு உணர்த்துது. சிவனும் பார்வதியும் இணைந்து, இந்த உலகத்தை சமநிலையில வச்சிருக்காங்கங்கறதுக்கு இந்த வாக்குறுதிகள் ஒரு ஆதாரம்.