தனுஷ், நாகார்ஜுனா இணையும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியீடு!

Danush and Kammula
Danush and Kammula

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணையும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே #DNS எனக் குறிப்பிடப்படும் பெயரிடப்படாதத் தெலுங்குப் படத்தின் பூஜை நடைபெற்றது. D என்றால் தனுஷ், N என்றால் நாகார்ஜுனா மற்றும் S என்றால் இயக்குனர் சேகர் கம்முலா ஆகும். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

இயக்குனர் சேகர் கம்முலா 2000ம் ஆண்டு டாலர் ட்ரீம்ஸ் என்ற படத்தை முதன்முறையாக இயக்கினார். ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், அவக்காய் பிரியாணி, லீடர், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், அனாமிகா, ஃபிடா ( தமிழில் பானுமதி) மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய படங்களை சேகர் இயக்கியுள்ளார். இப்போது இந்த ஆண்டு DNS  படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஸன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன.

மேலும் தனுஷ் படம் இயக்குவதிலும் நடிப்பதிலும் பிஸியாக உள்ளார். அந்தவகையில் சென்ற ஆண்டே DNS படத்தில் நடிக்க கையெழுத்திட்டார். இது தனுஷின் 51 வது படமாகும்.

மேலும் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களைத் திருப்திப் படுத்தவில்லை. ஆகையால் இந்தப் படத்தில் தனுஷ் மிகவும் கவனத்துடன் நடிப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் இந்தாண்டே வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
‘லால் சலாம்’ படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
Danush and Kammula

அந்தவகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டுப் படக்குழு படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு திரிசூலம் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இன்று மாலை 4.5 மணிக்கு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழு வெளியிடவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com