இயக்குனராக ஜெயித்த தனுஷ்... ராயன் படத்திற்கு கிடைத்த மாஸ் அங்கீகாரம்!

Dhanush
Dhanush
Published on

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ராயன் திரைப்படத்திற்கு ஆஸ்கரில் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகனாக பல்வேறு சாதனைகளை படைத்த தனுஷ், தற்போது இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். ராயன் அவர் இயக்கிய இரண்டாவது படமாக இருந்தாலும், அப்படத்தில் அவர் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ், இவர் கைவசம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் குபேரா, இந்தியில் ராஞ்சனா 2 போன்ற படங்கள் லைன் அப்பில் உள்ளன. இதுதவிர கோலிவுட்டில் இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், புதுப்பேட்டை 2, வடசென்னை 2 என தனுஷின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி நடிகனாக படுபிசியாக இருக்கும் தனுஷ், சைடு கேப்பில் இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டார். அதில் ஒன்று, ராயன் மற்றொன்று நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில் ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. தனுஷின் 50வது படம் இது என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ராயன் திரைப்படத்தை செம்ம மாஸாக எடுத்து நடிகனாக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார் தனுஷ்.

இதையும் படியுங்கள்:
War Song: தங்கலான் படத்தின் 'வெல்ல வா வா... ஆதியோனே' ரிலீஸ்!
Dhanush

ராயன் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக வாட்டர் பாக்கெட் பாடல் திரையிலும் ரசிக்கும் படியான நடன அசைவுகளுடன் இருந்ததால், இன்று இன்ஸ்டாகிராமில் திரும்பிய பக்கமெல்லாம் அப்பாடலின் ரீல்ஸ் தான் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றில் ஏ சான்றிதழ் பெற்று, ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம் ராயன் என்கிற சாதனையையும் அப்படம் படைத்துள்ளது. ஒருவாரத்தை கடந்தும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது ராயன். ராயன் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் இந்த சமயத்தில் மற்றுமொரு ஸ்வீட்டான விஷயத்தை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம்பெற தேர்வாகி உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ராயன் படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. ராயன் படத்திற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தால் படக்குழுவும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com