Thangalaan War Song
Thangalaan War Song

War Song: தங்கலான் படத்தின் 'வெல்ல வா வா... ஆதியோனே' ரிலீஸ்!

Published on

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் war பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

சினிமாவில் தொடரும் பாலா - விக்ரம் போட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் வந்துள்ளது. விக்ரமின் மகன் நடித்த ஆதித்ய வர்மா பட பிரச்சனையை தொடர்ந்து இருவருக்கும் கருத்த் வேறுபாடு இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்கலானும், வணங்கானும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ' தங்கலான்' படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தில் மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க, பார்வதி திருவோத்து, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் இருப்பதால் இந்த தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளார் பா.ரஞ்சித். ஏற்கனவே இந்த படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் என அடுத்தடுத்து ரிலீஸாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தில், விக்ரம் வித்தியாச தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார்.

மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலரும், முதல் பாடலான மேனா மினிக்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆங்கிலேயர் கால கட்டத்தில் தங்கம் எடுப்பதற்காக தொழிலாளர்கள் எப்படி அடிமை படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் விதத்தில் அமைந்திருந்தது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் அடுத்த பாடலான தங்கலான் வார் பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இதையும் படியுங்கள்:
The GOAT பட 3வது சிங்கிள் இன்று மாலை ரிலீஸ்... வைரலாகும் புரோமோ!
Thangalaan War Song

தன்னுடைய மயக்கும் இசையால், தங்கலான் படத்தில் தன்னுடைய மேஜிக்கை காட்டியுள்ளார் ஜிவி பிரகாஷ். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் இது தொடர்பான போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com