நடிகர் தனுஷ் நடிக்கும் ராயன் படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் தான் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த மாதம் வெளியானது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். தனுஷ் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக உள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் வைப் செய்தநிலையில் இயக்குனர் செல்வ ராகவனும் பாடலை வெகுவாக பாராட்டியிருந்தார்.
தனுஷ், மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து முதல் முறை பாடியுள்ளது இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷுக்கு கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை தரவில்லை. இதனால் ராயன் திரைப்படம் அவருக்கு சூப்பர் ஹிட் ஆக அமையுமா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். வடசென்னையை பின்னணியாக கொண்டு ராயன் படத்திற்கு தனுஷ் கதைக்களம் அமைத்துள்ளார். இந்த நிலையில் ராயன் படத்திற்கு தணிக்கை பட குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அதாவது வயது வந்தோர் மட்டுமே இந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இதன் மூலம் ராயன் திரைப்படத்தில் கதைக்கு ஏற்றவாறு வன்முறை காட்சிகள் மிக அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். முன்பு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன வடசென்னை படத்திற்கும் தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.