வீடியோவுடன் வெளியான சூப்பர் அப்டேட்! 'விடுதலை' படத்தில் இளையராஜா இசையில் தனுஷ் முதல் முறையாக பாடும் பாடல்!

வீடியோவுடன் வெளியான சூப்பர் அப்டேட்! 'விடுதலை' படத்தில் இளையராஜா இசையில் தனுஷ் முதல் முறையாக பாடும் பாடல்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

'அசுரன்', 'பாவ கதைகள்' படத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் படைப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவரவிருக்கும் படம்தான் 'விடுதலை'. இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் தனுஷ் முதன்முறையாக இளையராஜா இசையில் பாடிய பாடலின் ரிலீஸ் தேதியை வீடியோவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

எத்தனையோ இயக்குநர்கள் கோலிவுட்டில் வலம் வந்தாலும், ஒரு சில இயக்குநர்களுக்கான வரவேற்பு என்பது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்துவருபவர் இயக்குநர் வெற்றிமாறன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இவரது இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் 'விடுதலை'. இப்படத்தில் நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நடிகர் சூரிதான் இப்படத்தின் கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல் என அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை, ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள நிலையில், முதல் பாகம் வரும் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், விடுதலை படத்தின் பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதவாது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'உன்னோட நடந்தா' என்கிற பாடலை பிப்ரவரி 8ம் தேதி வெளியிட உள்ளதாக இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

அதிலும் விஷேசம் என்னவென்றால் இளையராஜா இசையில் இந்த முதல் பாடலை தனுஷ் பாடுகிறார் என்பதும், அதிலும் தனுஷ் இளையராஜா இசையில் பாடும் முதல் பாடல் இது என்பதும் சிறப்பாகும். இதுகுறித்து இளையராஜா தனுஷுக்கு பாட சொல்லிக்கொடுக்கும்படியான வீடியோ காட்சியை வெளியிட்டு பாடலின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர்.