ஆடி கிருத்திகை... அண்ணாமலையாரை தரிசனம் செய்த தனுஷ்!

Dhanush
Dhanush
Published on

ஆடி கிருத்திகை தினமான இன்று நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்து வருபவர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த அவரின் 50வது திரைப்படமான ராயன் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இயக்கியும் உள்ளார் தனுஷ். ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். தனுஷும், ஏ.ஆர்.ரகுமானும் பாடிய அடங்காத அசுரன் பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டடித்து வருகிறது. தியேட்டரிலும் மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

ராயன் திரைப்படத்தில் தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வரும் ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ராயன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் தனுஷ், கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
பிச்சைக்காரன் கெட்டப்பில் மனோஜ்... ஷாக்கில் விஜயா... 'சிறகடிக்க ஆசை' சீரியல் புரோமோ!
Dhanush

அந்த வகையில் ஆடி கிருத்திகை தினமான இன்று நடிகர் தனுஷ், திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தார். கையில் ருத்ராட்ச மாலையை சுற்றிக்கொண்டு, கடவுள் பக்தியோடு தனுஷ் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனுஷுடன் அவரது மகன்களும் வந்திருந்தனர். சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதமும் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

தனுஷ் திருவண்ணாமலைக்கு வந்திருந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அவரை காண கோவிலில் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி நடிகர் தனுஷை பத்திரமாக கோவிலுக்குள் அழைத்து சென்றனர். கோவிலில் தனுஷுடன் ரசிகர்கள் சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தனுஷ் திருவண்ணாமலை கோவிலுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com