புறநானூறு படத்தில் சூர்யாவிற்கு பதில் தனுஷா?

Dhanush and sudha kongra
Dhanush and sudha kongra
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக புறநானூறு படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா, நஸ்ரியா, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவிருப்பதாக வீடியோ கிளிம்ஸ் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதனையடுத்து தற்போது இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக தனுஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

சூர்யா மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றிய சூரரைப்போற்று படம் நல்ல வரவேற்பைப்பெற்றது. மேலும் அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷிற்கும் அந்தக் கூட்டணி ஒரு லக்கி கூட்டணியாக அமைந்தது. இதற்காக 2022ம் ஆண்டுச் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்தப் படம், சிறந்த இசையமைப்பாளர் என மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.

விருதுகளையும் ரசிகர்களின் அன்பையும் வாரிக் குவித்துக்கொண்ட இந்தக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு உண்மைக் கதையில் இணைகிறார்கள் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்களின் அறிவிப்பும் வெளியானது. அந்தவகையில் படத்தின் தலைப்பு புறநானூறு என்றும், இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகியோரும் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வந்தன. அதேபோல் இது ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் 100 வது படம் என்று அவர் ட்வீட் செய்து உற்சாகத்தைத் தெரிவித்தார்.

அந்த அறிவிப்புகளுக்குப் பின்னர் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றக் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

ஆனால் இதற்கு முன்னரே சூர்யா தனது லைனப்பில் பிஸியாக உள்ளதால் புறநானூறு படம் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமற்றச் செய்திகள் வந்தன. மேலும் கங்குவா படத்தில் சூர்யா தற்போது பிஸியாக இருந்து வருகிறார். 

இதனையடுத்து புறநானூறு படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இணையத்தில் பட சூட்டிங் தள்ளிப்போவதற்கு வருத்தம் தெரிவித்தார். சூர்யா 43 படத்திற்காக போடப்பட்ட திட்டங்கள் சரியாக நடந்திருந்தால் இந்நேரம் படத்தின் இரண்டு செட்யூல்கள் நிறைவடைந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெளியானது இந்தியன் 2 அடுத்த பாடல்... டாப் ட்ரெண்டிங்கில் இடம்!
Dhanush and sudha kongra

அந்தவகையில் சூர்யா, சுதா கொங்கராவுடன் தொலைபேசியில் பேசியதாகவும் புறநானூறு படத்தை விட்டுவிட்டு அடுத்த ப்ராஜெக்ட்டில் இணையலாம் என்றும் அதற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யுமாறும் சூர்யா கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சூர்யாவின் இந்த ப்ராஜெக்ட்டிற்கு சுதா கொங்கரா நோ சொன்னதாகவும் தான் அடுத்ததாக புறநானூறு படத்தை தான் இயக்க உள்ளதாக அவர் உறுதியுடன் சூர்யாவிடம் பேசி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் அடுத்ததாக சுதா கொங்கரா இணையவுள்ளதாகவும் அது புறநானூறு சப்ஜெக்டாக தான் இருக்கும் என்றும் முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com