வெளியானது இந்தியன் 2 அடுத்த பாடல்... டாப் ட்ரெண்டிங்கில் இடம்!

Indian 2
Indian 2

பல வருடங்களுக்கு பிறகு 2ஆம் பாகமாக உருவாகும் இந்தியன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ட்ரெண்டாகி வருகின்றன. அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் பாரா, கதறல்ஸ் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது காலண்டர் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலும் வெளியான சில மணி நேரங்களிலேயே டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தாத்தா வராரு கதற விட போறாரு என ரசிகர்களும் வைப் செய்து வருகின்றனர். இன்னும் பட ரிலீஸுக்கு 10 நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com