பாங்காக்கில் தனுஷின் 'குபேரா' திரைப்பட படப்பிடிப்பு!

Kubera movie
Kubera movie

நடிகர் தனுஷின் 51 ஆவது திரைப்படமாக உருவாகி வரும் ‘குபேரா’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக்கில் நடந்து வருகிறது.

தனுஷின் குபேரா:

நடிகர் தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இயக்குநர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படமானது  விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவு வெற்றிப் படமாக அமையவில்லை என்றாலும்கூட வசூல் ரீதியாக கேப்டன் மில்லர் வெற்றிப்படமாகவே அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தை ஒரு சிறந்த படைப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘ராயன்’ திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார் நடிகர் தனுஷ்.  நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகி வரும் ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைபாடுகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் சார்ந்த வேலைகளில் படக்குழுவினர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் தனது 51 ஆவது திரைப்படமான ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகும்  இந்தப் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இவ்விருமொழியிலும் உருவாகி வருகிறது. குறிப்பாக தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அதன்பிறகு மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கின்றார் தனுஷ்.  அதோடு இந்த படத்தில் இசையமைப்பாளராக தேசிய விருது பெற்ற ‘தேவி ஸ்ரீ பிரசாத்’ இணைந்துள்ளார். தனுஷுடன் இணைந்து நடிகை ரஷ்மிகா, நாகர்ஜுனா ஆகியோர் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Kubera movie
Kubera movie

வித்யாசமான கதைக்களம்:

குபேரா படத்தில் தனுஷின் கதாப்பாத்திரம் மற்றும் தோற்றம் இரண்டுமே மிகவும் வித்யாசமாக இருப்பதால் கண்டிப்பாக இப்படமும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்பை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்து கடவுளான குபேரர், செல்வ செழிப்பை அதிகரிக்கச்செய்யும் கடவுளாகவே விளங்குகிறார். எனவே பணத்தால் ஒருவரது வாழ்க்கை எப்படி மாறுகின்றது என்பதை சார்ந்து குபேரா திரைப்படத்தின் கதைகளம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி... ஜோடி சேர்ந்த மலையாள நாயகி!
Kubera movie

குபேரா படப்பிடிப்பு:

குபேரா திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் தொடங்கியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் நடிகர் நாகார்ஜுனாவும்  கலந்துகொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை படக்குழு தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com