கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் தனுஷ் மகன்... என்ன படம் தெரியுமா?

Dhanush's son yatra raja
Dhanush's son yatra raja

நடிகர் தனுஷ் தன்னுடைய மூத்த மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என செம்ம பிசியாக வேலை செய்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது D51 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர இவர் நடிப்பில் இளையராஜா பயோபிக் படமொன்றும் உருவாக உள்ளது. அதை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.

இது இல்லாமல் நடிகர் தனுஷ் இரண்டு படங்களை இயக்கியும் வருகிறார். அதில் ஒரு படத்துக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அதேபோல் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் ராயன். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் தனுஷ் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், சந்தீப் கிஷான், பிக்பாஸ் சரவணன், பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: போர்!
Dhanush's son yatra raja

இந்நிலையில், ராயன் படம் குறித்த மற்றுமொரு ஹாட் அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ராவும் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாகியுள்ளதாகவும், யாத்ராவுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அவரை ராயன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com