தமிழ் திரையுலகில் நீண்ட காலமாகவே பேசப்பட்டு வந்த தனுஷ், நயன்தாரா இடையேயான விவகாரம் குறித்து அனைவருக்கும் தெரியும். சென்ற ஆண்டு இறுதியில் நடந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் இது வெளிப்படையாக தெரிந்தது. இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் நவம்பர் 21, 2024 அன்று சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அத்துடன் திரையுலகைச் சேர்ந்த தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன், அனிருத், சிம்பு, அட்லீ எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்வில் தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா மூவரும் அருகருகே அமர்ந்திருந்தும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவோ அல்லது பேசிக் கொள்ளவோ இல்லை என்று தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக, தனுஷ் இடது பக்கத்தில் முதல் வரிசையிலும், சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் வலது பக்கத்தில் முதல் வரிசையிலும் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கிடையே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அமர்ந்திருந்தனர்.
தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே ஒரு ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை நிலவி வந்த நிலையில், இந்த நிகழ்வில் இருவரும் முகம் கொடுத்துப் பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்து. சிவகார்த்திகேயன், தனுஷுடன் ஒருசில நிகழ்வுகளில் கலந்துகொண்டாலும், இந்த திருமண விழாவில் அவர்களுக்குள் ஒரு கலகலப்பான பேச்சு வார்த்தை இல்லை என்றே கூற வேண்டும்.
இப்படியான நிலையில்தான், இன்று யூடியூப் பிரபலம் ஒருவர் தனுஷ் பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து PR வட்டாரத்தினரிடையே பரவலாக பேசப்பட்டதாக அந்த யூட்யூபர் தெரிவித்தார்.
அதாவது தனுஷ் பார்த்ததும் நயன்தாரா, PR டீமிடையே நான் தனுஷ் பக்கத்தில் தான் அமர வேண்டும், சிவகார்த்திகேயனை அந்த இடத்தில் இருந்து காலி பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார். சிவகார்த்திகேயனை எப்படி இடம் மாற்றி அமர செய்வது என PR-களுக்கு ரொம்பவும் தர்ம சங்கடமாக இருந்திருக்கிறது.
உடனே நயன்தாராவே அவரை கிப்ட் கொடுப்பதற்கு மேடை மீது அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார். சிவகார்த்திகேயன் மேடைக்கு செல்லும் நேரத்தில் தனுஷ் அமர்ந்திருக்கும் அதே வரிசையில் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து, தனுஷ்க்கு அருகில் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்து இருந்தாராம்.
இப்படி தனுஷை பழி வாங்க சிவகார்த்திகேயனை அவமதிக்கும் விதத்தில் நயன்தாரா நடந்துகொண்டது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.