Preity Zinta: வாழ்க்கை வரலாறு.. தனி ஆளாய் முன்னேறிய நட்சத்திரம்!

Preity Zinta
Preity ZintaImge credit: Hai Bunda
Published on

பிரீத்தி சிந்தா ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பாலிவுட் சினிமா உலகில் யார் துணையும் இல்லாமல் தானாகவே முன்னேறி தனக்கான இடத்தைப் பிடித்தவர். எவ்வளவு தடைகள் வந்தாலும் சிறிதும் தடுமாறாமல் தன் பாதையில் கவனமாக இருந்து  முன்னேறிய ப்ரீத்தி சிந்தாவின் வாழ்க்கை வரலாறை இந்த பதிவில் பார்ப்போம்.

பிரீத்தி சிந்தா, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், சிம்லாவில் உள்ள 'ரோஹ்ரு' என்ற இடத்தில் பிறந்தார். இவர் 13 வயதாக இருக்கும்போது இவரின் தந்தை ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அதேபோல் இவரின் தாயும் அடுத்த இரண்டு வருடங்களிலேயே இறந்துவிட்டார். பிரீத்தி, ஜீசஸ் பள்ளி மற்றும் மேரி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு சிம்லாவில் உள்ள செயின்ட் பிட்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்.

1996ம் ஆண்டு பிரீத்தி ஒரு தோழியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரைப் பார்த்த ஒரு இயக்குனர் சாக்லேட் விளம்பரத்தில் நடிக்க அழைத்தார். அங்குத்தான் அவரின் சினிமா பயணம் ஆரம்பித்தது. சாக்லெட் விளம்பரத்திற்கு பிறகு சோப் விளம்பரமும் நடித்தார். பின்னர் 1997ம் ஆண்டு அவரது தோழிக்கு துணையாக ஒரு ஆடிஷன் சென்றார். அந்த ஆடிஷனில் இயக்கனரும் நடிகருமான சேக்கர் கப்பூர் பிரீத்தி சிந்தாவை அவர் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார்.

Priety zinta
Priety zintaImge credit: Zoom News

அந்தவகையில் பிரீத்தி சிந்தாவிற்கு ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ‘ தரா ரம் பம்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் பல காரணங்களால் படம்பிடிக்கவில்லை. அதன்பின்னர் குந்தன் ஷாவின் ‘கியா கெஹ்னா’ படத்தில்தான் முதன்முறையாக நடித்தார். ஆனால் அந்த படமும் 2000ம் ஆண்டுத்தான் வெளியானது. அதற்கு இடையிலேயே மணி ரத்னம் இயக்கத்தில் 1998ம் ஆண்டு ‘தில் சே’ ( தமிழில் உயிரே) படத்தின் மூலம் இந்திய மக்களுக்கு அறிமுகமானார். அதன்பின்னர் 1998ம் ஆண்டு சிந்தாவிற்கு `Soldier` என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஃபிலிம் ஃபேர் விருதுகளை வெல்வதற்கு காரணமானது. அதன்பின்னர் பிரீத்தி `ப்ரேமெந்தே இடெரா` மற்றும் `ராஜ குமருடு` ஆகிய படங்கள் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

சினிமா துறையில் ஒரு பக்கம் வளர்ச்சி கண்ட பிரீத்தி தன் படிப்பில் முன்னேறவும் முயற்சி செய்தார். அதன்படி பிரீத்தி சிந்தா குற்ற உளவியல் (Criminal psychology)யில் முதுகலை படிப்பு வரை முடித்தார். அதேபோல் பிரீத்தி சிந்தா 2009ம் ஆண்டு 34 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பிரீத்தியை வளர்த்த ஷந்தார் என்பவர் இறக்கும் தருவாயில் 600 கோடியை பிரீத்திக்கு கொடுத்துள்ளார். ஆனால் அவர் அதனை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார்.

பிரீத்தி சிந்தா 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான ஜீன் குடெனஃபை திருமணம் செய்துக்கொண்டார். லாஸ் ஏஞ்செலில் திருமணம் செய்துக்கொண்ட இவர்கள் மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதையும் படியுங்கள்:
வைஜெயந்திமாலா பாலி: இந்தியாவின் பெருமை மிகு அடையாளம்!
Preity Zinta

பிரீத்தி சிந்தா இதுவரை ஏறத்தாழ 50 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2003ம் ஆண்டு நடந்த பாரத் ஷா வழக்கில் (பாரத் ஷா என்ற படத் தயாரிப்பாளர் சில நடிகர்களை ரவுடி வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கு) அவரின் தைரியமான செயலால் godfreys mind of steel என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com