Atlee
Atlee

பாலிவுட்டில் கலக்க மும்பையில் பிரம்மாண்ட ஆபிஸ்... அட்லியின் அசுர வளர்ச்சி!

Published on

ஜவான் படத்திற்காக சில மாதங்கள் மும்பையிலேயே முகாமிட்டிருந்த அட்லீ தற்போது ஒரு அடுத்த கட்ட நகர்வை துவக்கியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் இந்தியில் வெளியானது ஜவான் திரைப்படம்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் மாஸ் காட்டினார் இயக்குநர் அட்லீ. விஜய்யுடன் தொடர்ந்து 3 படங்களில் இணைந்ததால் ஒட்டுமொத்த திரையுலகமும் அட்லீயை திரும்பிப் பார்த்தது. அடுத்த அதிரடியாக பாலிவுட் சென்ற அட்லீ, இந்தியில் முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் இணைந்தார்.

அதன்படி, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்த ஜவான், செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த ஜவான், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதனால் பாலிவுட்டிலும் அட்லீயின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. முன்னதாக ஜவான் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே மும்பையில் வீடு வாங்கினார் அட்லீ.

இதையும் படியுங்கள்:
தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம்... டாப் ட்ரெண்டிங்கில் மோஷன் போஸ்டர்!
Atlee

இந்த நிலையில், தற்போது அங்கே 40 கோடி செலவில் 10 ஆயிரம் சதுரடியில் அலுவலகம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான அத்தனை வழிகளையும் அட்லீ முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com