தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம்... டாப் ட்ரெண்டிங்கில் மோஷன் போஸ்டர்!

தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம்... டாப் ட்ரெண்டிங்கில் மோஷன் போஸ்டர்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் தனுஷின் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகும் 'DD3' படத்திற்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தையில் இருந்த இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் தனுஷ், சினிமா துறையில் பல வேலைகளை செய்து வருகிறார். படம் தயாரிப்பு, பாடல்கள் எழுதுவது, இயக்கம் என பல்வேறு துறைகளில் தனது காலடி தடத்தை பதித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனராக களத்தில் இறங்கிய நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இதற்கு முன்னதாக 2017ம் ஆண்டு இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடும் தனுஷ்!
தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் அடுத்த படம்... டாப் ட்ரெண்டிங்கில் மோஷன் போஸ்டர்!

இந்த நிலையில், நேற்று தனுஷ் இயக்கத்தில் அனிகா சுரேந்திரன்,பவிஷ் மற்றும் பிரியா வாரியர் நடித்து ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் வெளியான NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் 2 லட்சம் பார்வையாளர்களுடன் யூடியூபில் 5ஆம் இடத்தில் டிரெண்டிங் ஆக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com