இயக்குனர் பாரதிராஜா ஒரு சிறந்த படைப்பாளி; ஏன் தெரியுமா?

Director Bharathiraja
Director Bharathiraja
Published on

- ராதாரமேஷ்

சினிமா என்பது அனைத்து கலைகளின் சங்கமம் என்று  சொன்னால் அது மிகையாகாது. இன்றளவும் கூட மக்களின் விருப்ப தேர்வுகளில் முதலிடம் வகிப்பது சினிமாவே. 

இன்றைய தமிழ் சினிமா மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம். ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு தீனி போடத்தான் இங்கே ஆட்கள் இல்லை. 

ஒரு பிரச்சினையை எப்படி பார்ப்பது, எப்படி அணுகுவது, எப்படி தீர்ப்பது போன்ற எல்லா முடிவுகளையும் ஒரு சினிமாவில் காட்டிவிட முடியும். அத்தகைய தமிழ் சினிமாவில், மாபெரும் படைப்பாளி யார் என்றால் அது நிச்சயம் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் பெயரை தொட்டுச் செல்லும்.

எந்த ஒரு படைப்பு அந்தந்த காலகட்டங்களில் உள்ள பிரச்சனையை மையமாக வைத்து படைக்கப்படுகிறதோ, அந்தந்த காலகட்டங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடித் தருகிறதோ, அத்தகைய படைப்புகளே  ஆகச்சிறந்த படைப்புகள். அதற்கு எடுத்துக்காட்டாக அவர் இயக்கிய வேதம் புதிது மற்றும் கருத்தம்மா ஆகிய இரு படங்களை கூறலாம். 

முதலாவதாக வேதம் புதிது:

அன்றைய காலகட்டத்தில் இருந்த ஜாதி பிரச்சனைகளை மையமாக வைத்து வேதம் புதிது படத்தை இயக்கியிருப்பார் பாரதிராஜா. 

"பாலு என்பது உங்கள் பெயர், தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? " என்று கேட்கும் சிறுவனின் கேள்வி, ஆயிரம் சவுக்கடிகளுக்கு சமம். சாதிகள் உடைந்து மானுடம் தழைப்பதை தன்னுடைய கேமராக்களில் மிக அழகாக படம் பிடித்துக் காட்டி இருப்பார் இயக்குனர் பாரதிராஜா.

இதையும் படியுங்கள்:
கடைசி உலகப் போர்... மிரட்டலான லுக்கில் ஹிப்ஹாப் ஆதி!
Director Bharathiraja

இரண்டாவது படம் கருத்தம்மா. இப்படத்தில் சமூகத்தின் தவிப்பையே ஒரு குடும்பத்துக்குள் அடக்கி காட்டியிருப்பார். வரதட்சனை எனும் கொடிய நோய் எப்படி எல்லாம் பரவி ஊடுருவி நிற்கிறது என்பதை இப்படத்தில் ஆணித்தரமாக பதிய வைத்திருப்பார். ஒரு குடும்பத்தின் நிலை என்னவோ அதுவே இச்சமூகத்தின் நிலையும் என்ற சமூக அவலத்தை இத்திரைப்படத்தில் நம்மால் அழுத்தமாக உணர முடியும். 

அப்படியிருக்கையில், காலத்தின் அவலங்களை மிக அருமையாக படம் பிடித்து காட்டிய இயக்குனர் பாரதிராஜா இமயம்தான் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com