ஜி.வி.எம்மும் மம்முட்டியும் விரைவில் இணையவுள்ளனர்!

Mammootty & Gautham Vasudev Menon
Mammootty & Gautham Vasudev Menon

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகர் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்முட்டி தற்போது வைசாக் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி நகைச்சுவை படமான டர்போவில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பனி பேனரால் தயாரிக்கப்படும் டர்போ படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. டர்போ படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், படமானது வரும் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் மம்மூட்டியுடன், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார் மம்முட்டி. ஆனால், இந்த படத்தை இயக்கப்போவது மலையாள இயக்குநர்கள் இல்லை. தமிழ் திரையுலகில் பிரபலமான பல்வேறு வெற்றி படங்களை அளித்துள்ள கவுதம் வாசுதேன் மேனன் தான். முதல் முறையாக மலையாளத்தில் படத்தை இயக்குவது என்று வாசுதேவ் மேனன் தீர்மானித்துள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனனை பொறுத்தவரை அவரது இயக்கத்தில் கடைசியாக ‘ஜோஷ்வா’ திரைப்படம் வெளியானது. அதைதொடர்ந்தே மம்முட்டியின் படத்தை இயக்கவுள்ளளார். கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கிய கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு சிறந்த நடிகராகவும் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வெளியானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Mammootty & Gautham Vasudev Menon

சமீபத்தில், கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில், மலையாளத்தில் படம் இயக்கலாமா என யோசித்து வருகிறேன். சில நடிகர்களுடன் அது தொடர்பாக பேசி வருகிறேன். குறிப்பாக மம்மூட்டி அல்லது ஃபஹத் ஃபாசிலை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com