வெளியானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியன்2
இந்தியன்2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தேதி கசிந்துள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

முதல் பாகம், மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப் பட உள்ளதாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு முந்தைய படங்களில் ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஹாரிஷ் ஜெயராஜ் ஆகிய இரு இயக்குனர்களுடன் மட்டும் பணியாற்றி வந்த ஷங்கர், தற்போது முதன்முறையாக அனிருத் உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியன் 2 படத்தின் கமல்ஹாசன் நடிக்க இருந்த மொத்த காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், படம் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதன்படி இப்படத்தை ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வரும் முடிவில் இருந்த படக்குழு, பின்னணி பணிகள் முடிய தாமதம் ஆவதால் அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இதனால் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருந்த நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது.

இதையும் படியுங்கள்:
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிக்கும் ஜோ பட நடிகர்!
இந்தியன்2

அதன்படி இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இப்படம் போட்டியின்றி சிங்கிளாகவே ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்துக்கு முன்னதாக கமல்ஹாசன் நடித்துள்ள பான் இந்தியா படமான கல்கி 2898AD திரைப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com