இயக்குநராகும் ஜெயம் ரவி… ஹீரோ யார் தெரியுமா?

Jayam ravi
Jayam ravi
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும் இந்தப் படத்தில் அவருடன் ஏற்கனவே சேர்ந்து நடித்த ஒருவர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

சினிமா தொகுப்பாளர் மோகனின் இரண்டாவது மகன் ஜெயம் ரவி. ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக  நடித்து சினிமா துறையில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. ஹீரோவாக நடித்த முதல் படமே (ஜெயம்) இன்றளவும் பேசப்பட்டு வரும் ஒரு படமாக இருந்து வருகிறது.

அதன்பின்னர் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களைக் கொடுத்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்து பிரபலமானார். இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. தற்போது இவரது நடிப்பில் ப்ரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் லைனப்பில் உள்ளன.

இதற்கிடையே ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்திக்கும் தனக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இருவருக்கும் இடையே காரசாரமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமூக வலைதளங்களில் பலர் ஜெயம் ரவிக்கு ஆதரவாக குரல்கள் எழுப்பினர்.

இந்த சமயத்தில் ஜெயம்ரவி இயக்குநராக களமிறங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்போது நடிகர்கள் பலர் இயக்குநர் அவதாரம் எடுக்கின்றனர். தனுஷின் ராயன் படம் வெளியாகி வசூல் ரீதியாக ஹிட்டானது.

இதையும் படியுங்கள்:
தல இல்லை; கேப்டன் தான்! ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ருசிகரத் தகவல்!
Jayam ravi

அந்தவகையில் ஜெயம் ரவி இயக்கும் படத்தில் யோகி பாபு நடிக்கவிருக்கிறாராம். இவர்கள் இருவரும் ஏற்கனவே கோமாளி படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இந்த படத்திற்கு பின்னர் இருவரும் சைரன் படத்தில் சேர்ந்து நடித்தனர்.

யோகிபாபு காமெடியனாக ஒருபக்கம், ஹீரோவாக ஒருபக்கம் கலக்கி வருகிறார். இவர் நடித்த கூர்கா, மண்டேலா ஆகிய படங்கள் செம்ம ஹிட்டாகின. என்னத்தான் ஹீரோவாக கலக்கினாலும், காமெடியன் கதாபாத்திரங்களையும் விடாமல் நடித்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் யோகி பாபு.

logo
Kalki Online
kalkionline.com