சோசியல் மீடியாவில் இருந்து விலகும் இயக்குனர் 'லோகேஷ் கனகராஜ்' - ரசிகர்கள் அதிர்ச்சி!

கூலி திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.
Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj
Published on

2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயங்குநராக அவதாரம் எடுத்தார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் இதனை தொடர்ந்து ஹீரோயினே இல்லாமல் நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' திரைப்படத்தை அதிரடி கதைக்களத்தில் இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை இயங்கிய லேகோஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது.

அடுத்து இவரது இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்து வியாபார ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார். இதற்காகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

நடிகர்கள் விஜய், கமல்ஹாசனை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார்.

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நாகர்ஜூனா, உப்பேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள, கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பின்னணி வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதாவது கூலி படத்தின் புரமோஷன் பணிகளில் கலந்து கொள்ள உள்ளதால் அனைத்து சமூக ஊடக தளத்தில் இருந்து சிறிது காலத்திற்கு இடைவெளி எடுத்துக்கொள்வதாக, அதாவது தற்காலிகமாக சமூக வலைதள பக்கத்தில் இருந்து விலகுவதாக அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் நிம்மதியடைந்த ரசிகர்கள் ‘கூலி’ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
"நண்பா வா இப்பவும் எப்பவும்" கூலி படத்தில் மீண்டும் நண்பருடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com