LCU-ஐ மையமாக வைத்து இயக்குநர் லோகேஷின் புதிய குறும்படத்திற்கான அப்டேட்!

Lokesh kanagaraj
Lokesh kanagaraj

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் மறுக்க முடியாத இடத்தில் இடம்பெற்றிருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே மிகச்சிறந்த தனித்துவத்தோடு அமைந்திருக்கும், அதாவது தனக்கு மட்டுமே உரிய திரைப்படம் இயக்கும் பாணியை கையாள்வதில் இவர் சிறந்தவர்தான். அதன்படி ‘LCU’ அதாவது ‘லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ்’ என்ற கான்சப்டின் அடிப்படையில் தான் இவருடையத் திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன.

அந்த வரிசையில் விக்ரம், லியோ, கைதி போன்ற படங்கள் உள்ளடக்கப்பட்டவை. தற்போது இவர் நடிகர் விஜய்யை வைத்து  இயக்கிய “லியோ” திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தலைவர் 171 என்ற திரைப்படத்தில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் லோகேஷ்.

தலைவர் 171

லியோ திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என லோகேஷ் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த திரைப்படம் குறித்த தொடர் அப்டேட்டுகள் கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் தலைவர் 171 குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
Lokesh kanagaraj

குறும்படத்திற்கான புதிய அப்டேட்:

தற்போது கிடைத்துள்ள அண்மைத் தகவல்களின்படி இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் ‘LCU’ வை மையமாக வைத்து 15 முதல் 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார். அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார். அக்குறும்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே இயக்குநர் லோகேஷின் படைப்புகளில் ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ்களுக்கும் டுவிஸ்ட்டுகளுக்கும் பஞ்சமே இருக்காது அந்தவகையில் ‘LCU’ வை மையமாக கொண்டு இந்த குறும்படத்திற்கான எதிர்பார்பானது ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com