கமலின் தக் லைஃப் ஷூட்டிங் இன்று முதல் தொடக்கம்.. படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

கமலின் தக் லைஃப் ஷூட்டிங் இன்று முதல் தொடக்கம்.. படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் கமல்ஹாசனின் 234-வது படமான தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து 35 வருடங்களுக்கு பிறகு KH 234 படத்தின் மூலம் இணைகிறார்கள். இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இப்படத்தில் ஜெகமே தந்திரம், மதுரம், ஜோசப் போன்ற படங்கள் மூலமாக புகழ்பெற்ற மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் டைட்டிலும், ஒரு சிறிய க்ளிம்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. இதில், போதி தர்மர் போன்ற பழைய உடையை அணிந்தவாறு நடிகர் கமல்ஹாசன் எனது பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர்; ஞாபகம் வச்சிக்கோங்க என கூறுகிறார்.

மேலும் பிறக்கும் போது கிரிமினல், கேங்ஸ்டருனு என் தலையில எழுதி வச்சிட்டாங்க என்று சொல்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சம்பவம் இருக்கு என கமெண்ட் தட்டி வருகின்றனர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் போன்ற படம் மாதிரி இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
யார் இந்த அரிஸ்டாட்டில்? அரசியல் அறிவியலின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!
கமலின் தக் லைஃப் ஷூட்டிங் இன்று முதல் தொடக்கம்.. படக்குழு அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பல படங்களில் கமிட்டாகியுள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com