யார் இந்த அரிஸ்டாட்டில்? அரசியல் அறிவியலின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

Who is known as father of political science - Aristotle
Who is known as father of political science - Aristotleimg cred: pngtree

அரிஸ்டாட்டில் கிமு 384ம் ஆண்டு கிரேக்க நாட்டில் உள்ள ஸ்டாகிரஸ் என்ற நகரில் பிறந்தார். இவரின் தந்தை நிக்கோ மாக்கஸ், மாஸிடோனியாவின் மன்னன் பிலிப்ஸுக்கு அரசு மருத்துவராக பணியாற்றினார். இதனால் தனது தந்தைக்கு அவ்வப்போது உதவியாக இருந்த அரிஸ்டாட்டில் தனது 17 வயதில் பிளேட்டோவின் அகடாமியில் கல்வி கற்கச் சென்றார்.

அரிஸ்டாட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் பிளேட்டோவையே மிஞ்சும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் கைத்தேர்ந்தார். அப்பள்ளியில் அரிஸ்டாட்டிலை ‘அறிவு களஞ்சியம்’ என்றுத்தான் அழைப்பார்கள். இதனை அறிந்த மன்னன் பிலிப்ஸ்,  அரிஸ்டாட்டிலை தனது மகனுக்குப் பாடம் கற்பிக்கும்படி அழைப்புவிடுத்தார். அந்த மகன் வேறு யாரும் இல்லை, "கைப்பற்றுவதற்கு இனி தேசமே இல்லை" என்று  கலங்கிய அலெக்ஸாண்டர் தான். அலெக்ஸாண்டர் பல நாடுகளை வரிசயாக கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவை அரிஸ்டாட்டிலின் போதனைகளே ஆகும்.

மன்னன் பிலிப்ஸ் இறந்தவுடன் அலெக்ஸாண்டர் அரியனை ஏறினார். பின்னர் அரிஸ்டாட்டில் ஏதென்ஸுக்கு திரும்பி அங்குத் தன்னுடைய சொந்த பள்ளியை நிறுவினார். அவர் தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 400 புத்தகங்களை எழுதிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அவற்றில் பாதி புத்தகங்களைப் படிக்கும் பாக்கியம் நமக்கில்லை என்பதே உண்மை. அரிஸ்டாட்டில் விலங்கியல், தாவரவியல், பௌதீகம், அரசியல், பொருளியல், கவிதை, தத்துவம் என அனைத்துத் துறைகளிலும் சிறந்தவராக விளங்கினார்.

அரிஸ்டாட்டிலை ‘மேற்கத்திய நாகரிகத்தின் தந்தை’ என்றும் ‘அரசறிவியலின் தந்தை’ என்றும் அழைப்பார்கள். ஏனெனில் கிரேக்க காலத்தின் அரசியல் வாதிகள் அரசும் சமுதாயமும் வெவ்வேறு அல்ல என்பதை தனது ஆட்சியின் மூலம் நிரூபித்தார்கள். அதாவது கிரேக்க அரசு சீசர் மற்றும் சிசரோ ஆகியோரை மக்கள் தொடர்புக்காகவே நியமித்தது.

Who is known as father of political science - King Alexander
Who is known as father of political science - King AlexanderCleopatra Egypt Tours

சீசர், எந்த ஒரு அரசினால் மக்கள் நன்மையடைகிறார்களோ அதுவே ஒரு நல்ல அரசு என்று நம்பினார். இதனைப் பற்றி அறிந்த அரிஸ்டாட்டில் அரசுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள ஒற்றுமையை  நிறைய ஆராய்ச்சி செய்து, அதற்கு ‘அரசறிவியல்’ என்று பெயரிட்டார். மேலும் எந்தெந்த வகையில் அரசு மக்களுக்கு உதவி செய்யலாம் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து, கிரேக்க அரசுக்கு ஒரு பக்க பலமாக இருந்தார் அரிஸ்டாட்டில்.

இதையும் படியுங்கள்:
நினைவுக்கும் உணர்வுக்கும் இடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!  
Who is known as father of political science - Aristotle

கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டரின் இறப்பிற்கு அந்நாட்டு மக்கள் அரிஸ்டாட்டில் மீது சந்தேகம் கொண்டனர். ஆகையால் அவர் ஏதென்ஸை விட்டு வெளியேறி ஜால்சில் என்ற இடத்திற்கு சென்று மறைமுகமானார். அங்கு சென்ற ஒராண்டு காலத்தில் வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு தனது 62 வயதில் காலமானார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் கிரேக்க அரசை வீழ்த்தி ரோமன் அரசு கிரேக்க நாட்டைக் கைப்பற்றியது . அந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு சட்டங்களையும் நிறைவேற்ற அதற்கான ஆட்களை நியமனம் செய்தது ரோமன் அரசு. பின்னர் அரசறிவியல் வளர்ச்சி அடைந்துக்கொண்டே சென்றது. என்னத்தான் ரோமன் அரசு அரசறிவியலை வளர்த்தது என்றாலும் அரிஸ்டாட்டிலே வித்திட்டவராக கருதப்படுகிறார். ஆகையால் தான் அவருக்கு அரசறிவியலின் தந்தை என்ற பெயரும் வழங்கப்பட்டது.

ஒருவனிடம் அச்சம் கொண்டால் அவனிடம் அன்புக்கொள்ள முடியாது” என்று கூறிய அரிஸ்டாட்டில், இறுதியில் யாருடைய அன்பும் இல்லாமல் தனது புத்தகங்களின் அணைப்பிலே இறந்துப்போனார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com