"ஜனகராஜ் காமெடி நடிகர் மட்டுமில்லை, ஒரு குணச்சித்திர நடிகரும் கூட." - இயக்குனர் நரேஷ்

ஜனகராஜ் நடிப்பில் உருவான தாத்தா குறும்படம்!
Thatha short film
Thatha short film

80 மற்றும் 90-களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் ஜனகராஜ். அவர் இப்போது புதுமுக இயக்குனர் நரேஷ் இயக்கத்தில் தாத்தா என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் ஜனகராஜ் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 96 படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதற்கிடையில் அவர்  அமெரிக்காவில் தனது மகனுடன் வசித்து வருவதாகவும், இனி சினிமாவில் அவ்வளவாக நடிக்கப்போவதில்லை என்றும் வதந்தி பரவியது. அந்த வதந்திக்கெல்லாம் ஜனகராஜ் ஒரு பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்தார். அதாவது தான் சென்னையில்தான் வசித்து வருவதாகவும், சினிமாவில் நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன் என்றும் கூறினார். சினிமாவில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்றில்லாமல், இன்றைய தலைமுறைகளை ஆதரிக்கும்விதமாக தற்போது தாத்தா என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த குறும்படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குனர் நரேஷ் “முதலில் ஒரு குறும்பட எடுக்கனும்னு ஐடியா வந்தது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான ஒரு எமொஷ்னல் கதை இது. இந்த கதையில் ஜனகராஜ் சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அவர் ஒரு காமெடி நடிகர் மட்டுமில்லை, ஒரு குணச்சித்திர நடிகரும் கூட. அவருடைய எமோஷ்னல் நடிப்பைப் பார்த்து நான் பல முறை அழுதிருக்கிறேன்.

நான் நினைத்த மாதிரி அவர் இதில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறும்படமும் நன்றாக வந்திருக்கிறது. நான் முதலில் அவருக்கு கால் பண்ணி கதை கூறினேன். அவருக்கு குறும்படம் பற்றி பெரிதாக ஐடியா இல்லை. பின்னர் எனக்கு அப்பாயின்ட்மென்ட் மட்டும் கொடுங்கள். நான் வந்து கதையை நேரில் கூறுகிறேன் என்றேன். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. இதற்கு முன்னர் நான் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளேன். ஆனால் இதுவே சீனியர் நடிகர் வைத்து எடுத்த முதல் படமாகும். ஜனகராஜ் சார் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்தார். ஷாட் ரெடின்னு சொன்னதும் ஓடி வருவார்.

இதையும் படியுங்கள்:
ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த பட அப்டேட்... குஷியில் ரசிகர்கள்!
Thatha short film

இவ்வளவு அவசரம் இல்லை பொறுமையாக வாங்க சார்-ன்னு சொல்லுவோம். பழகிடிச்சு குட்டி-ன்னு சொல்லுவாரு. நான் பாலாஜி தரணிதரன் சாருடைய 'ஒரு பக்க கதை' மற்றும் 'சீதக்காதி' ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினேன். அதேபோல் சூரரைப்போற்று இந்தி ரீமேக் படமான 'சர்ஃபிரா' படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றினேன். செல்வராகவனின் 'புதுப்பேட்டை' படத்தைப் பார்த்துதான் சினிமாவிற்கு வர ஆசைப்பட்டேன். ஜனகராஜ் சார்  ஹெல்த் ஃபிட்னஸ் விஷயத்தில் மிகவும் கவனமாகவே இருக்கிறார்” இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com