ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த பட அப்டேட்... குஷியில் ரசிகர்கள்!

Hiphop Tamizha Adhi
Hiphop Tamizha Adhi

இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்த ஹிப் ஹாப் ஆதியை 2017 ல், மீசையை முறுக்கு படத்தில் நாயகனாக்கினார் சுந்தர் சி. கதை, திரைக்கதை, இசை, பாடல்கள், இயக்கம், நடிப்பு என்று முதல் படத்திலேயே பல அவதாரம் எடுத்தவர் தான் ஹிப் ஹாப் ஆதி.

ஆனால், அதற்கு முன்பே இவர் இசையமைப்பாளராக பல திரைப்படங்களில் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக படங்களை இயக்கி வந்த ஆதி அவர்கள், அண்மையில் திரைத்துறையில் இருந்து சற்று ஓய்வு பெற்று, தன்னுடைய டாக்டரேட் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தற்போது அதற்கான பட்டமும் அவர் பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததே.

pt sir
pt sir

இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவான வீரன் திரைப்படத்தில் நடித்திருந்த ஆதி, தற்போது இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள PT சார் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவரின் படங்கள் காமெடி கலந்து பேமிலி எண்டெர்டெயின்மெண்டாக இருப்பதால் அனைவருக்கும் பிடிக்கின்ற படமாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
தாதாசாகேப் பால்கே விருதுகள் (DPIFF) - 2024!
Hiphop Tamizha Adhi

தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்துள்ளது என்றும், விரைவில் அந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில், பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் மூலம் புகழ்பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பால் இவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com