தனது கனவு திட்டம் குறித்து இயக்குநர் ராஜமௌலி மனம் திறந்துள்ளார்.
சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. அப்படி இது போன்ற கதைகளுக்கு விதை போட்டவர் தான் இயக்குநர் ராஜமௌலி. பாகுபலி படத்தை எடுத்து சாதனை படைத்தவர் தான் ராஜமௌலி. பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 1800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இயக்குநர் ராஜமௌலியின் கற்பனைத்திறனுக்கு ஈடு இணையில்லை. அவர் திட்டமிட்டால் அது உச்சத்தில் இருக்கும். வேறு எந்த இயக்குனரும் செய்யமுடியாத அளவுக்கு அவருடைய திட்டங்கள் உள்ளன. அவருக்கு மகாபாரதத்தை படமாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதை ஐந்து பாகங்களாக எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளார். இதை அவர் முன்னதாகவே அறிவித்தார்.
ராஜமௌலி தனது கனவுத் திட்டத்திற்கு ஆயத்தமாகும் வகையில், ஈகா, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போறன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். தற்போதைய மகேஷ் பாபு படமும் அதில் ஒரு பகுதிதான். மகாபாரதம் படத்தை அவெஞ்சர்ஸ், அவதார் போன்று உலக சினிமா உலகமே வியக்கும் வகையில் எடுக்க வேண்டும் என்பதே ராஜமௌலியின் திட்டம்.
சமீபத்தில் பாகுபலி' அனிமேஷன் திரைப்பட வெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவர் தனக்கு இன்னொரு கனவு திட்டம் உள்ளது என்றும் கூறியுள்ளார். அனிமேஷன் படம் எடுக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதற்காகத்தான் பாகுபலி அனிமேஷன் படத்துக்கு ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். பிரமாண்டமான அனிமேஷன் படம் எடுக்க வேண்டும். இப்போது ரசிகர்கள் அப்படிப்பட்ட படங்களையும் விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டிப்பாக எதிர்காலத்தில் அந்த மாதிரியான படத்தை எடுப்பேன். ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகத்தையும், பாகுபலி படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுப்பதற்கும் எனக்கு ரொம்பவே ஆசை இருக்கிறது. மகேஷ்பாபுவை வைத்து இப்போது நான் இயக்கும் படத்தை முடித்துவிட்டு பாகுபலி படத்தின் மூன்றாவது பாகத்தையும் உருவாக்குவேன் என்றார்.