பாகுபலி 3 படம் உருவாகிறதா? ராஜமௌலியின் சூப்பர் அப்டேட்!

Bahubali 3
Bahubali 3

ராஜமௌலி  இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்திய அளவில் நல்ல வரவேற்பைப்பெற்றன. இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை பற்றிய சூப்பர் அப்டேட்டை ராஜமௌலியே கூறியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் வெளியாகி ரூ600 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தின் மூலமே ராஜமௌலி பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என்ற பட்டத்தைப் பெற்றார். அதேபோல் இரண்டாம் பாகம் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 1800 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது. சொல்லப்போனால் படத்தின் கதை இரண்டு பாகங்களிலேயே முழுமை பெற்றது. ஆனால், பாகுபலி 3 படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இதனையடுத்து RRR படத்திற்கு முன்னரே பாகுபாலி 3 படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சற்றும் எதிர்பாராவிதமாக ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது. இப்படம் உலகளவில் இந்திய படங்களின் தரத்தை எடுத்துக்காட்டியது.

இதனையடுத்து சமீபத்தில், இப்படத்திற்கு பின்னர் ராஜமௌலி மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளதாக செய்திகள் வந்தன. இதன் அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து ராஜமௌலி பேசினார். ஆகையால் இப்படம் உருவாகவுள்ளது அதிகாரப்பூர்வமானது.

இதற்கிடையே, பாகுபலி – கிரவுன் ஆஃப் பிளட்ஸ் என்ற அனிமேஷன் தொடர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் வரும் 17ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்தத் தொடரின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ராஜமௌலி, “பாகுபலி படத்துக்கு எப்போதும் என் மனதில் இடம் உண்டு. அதன் ப்ரமோஷனுக்கு அதிகம் செலவழித்ததாக சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. மொத்த பணத்தையும் படத்தின் தயாரிப்புக்காகவே செலவழித்தோம்.

இதையும் படியுங்கள்:
Thuglife: ஜெயம்ரவிக்கு பதிலாக வளர்ந்து வரும் முன்னணி நடிகர்! யார் தெரியுமா?
Bahubali 3

டிஜிட்டல் போஸ்டர் மற்றும் வீடியோக்களை உருவாக்க எங்கள் மூளையை மட்டுமே பயன்படுத்தினோம். கதாப்பாத்திரங்களையும் மேக்கிங் வீடியோக்களையும் வெளியிட்டோம். அதுவே பெரிய விளம்பரங்களை கொடுத்தன. பாகுபலி 3ம் பாகம் எப்போது உருவாகும் என்று கேட்கிறார்கள். ‘ஆர்ஆர்ஆர்’ படம் முடிந்ததுமே அதைத் தொடங்கி இருக்க வேண்டும். தள்ளிப்போய் விட்டது. கண்டிப்பாக ‘பாகுபலி 3’ படம் உருவாகும். பிரபாஸுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.”என்று பேசினார்.

எனவே, ராஜமௌலி, மகேஷ் பாபு படம் முடிந்ததும், பிரபாஸின் கல்கி 2898 AD படம் முடிந்ததும் பாகுபலி 3 படம் உருவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com