கார்த்தியின் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

JAPAN MOVIE
JAPAN MOVIE

டிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘ஜப்பான்’. ’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு இந்த படத்தை தான் இயக்குகிறார். கார்த்தியின் 25வது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனு இமானுவேல் ஹீரோயினாக நடித்துள்ளார்.தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘ஜப்பான்’ டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஜப்பான் படத்திற்கு கார்த்தி டப்பிங் கொடுக்கும் வீடியோ வெளியாகி எதிர்ப்பார்ப்பை தூண்டியது. வித்தியாசமான கதாபாத்திரத்தில், வித்தியாசமான பேச்சுவழக்கில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ரூ.200 கோடி பணத்தை கொள்ளையடித்தவர், இந்தியாவில் 180 வழக்குகளை கொண்ட 4 மாநில காவல் துறை தேடும் ஒருவர் என கார்த்திக்கு பில்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com