அப்பாவுடனான சண்டைக்கு எண்ட் கார்ட் போட்ட விஜய்... வைரலாகும் எஸ்.ஏ.சி பதிவு!

Vijay family
Vijay family

தனது பெற்றோருடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய், GOAT படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அரசியலிலும் என்ட்ரி கொடுத்து இருக்கும் இவர், கைவசம் உள்ள படத்தை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். இனிமேல் சினிமாவில் நோ எண்ட்ரி என்றும் கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அதனால் தான் விஜய் ரசிகர்கள் GOAT படத்திற்காக ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க வந்த விஜய், லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து தனது திறமையால் வளர்ந்து இன்று ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலையை எட்டியுள்ளார். இவர் தனது அப்பாவின் தயவில் தான் சினிமாவிற்கு வந்தார் என்ற பேச்சு எழுந்தாலும், திறமை இல்லாமல் அந்த உச்சத்தையும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியாது. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு தேர்தலே தனது இலக்கு என்றார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை கொஞ்சும் சிம்பு... இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ!
Vijay family

இந்நிலையில், நடிகர் விஜய், அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் விஜய், அப்பாவின் தோளில் கை போட்டுக்கொண்டு அழகாக போஸ் கொடுத்துள்ளார். அப்பாவிற்கும் மகனுக்கும் மனக்கசப்பு இருக்கும் நிலையில், அந்த போட்டோவில் எஸ்.ஏ.சந்திரசேகர் மகிழ்ச்சியாக இருப்பதால் ரசிகர்களும் இதை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார். இதனால் இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com