Indian 2
Indian 2

ஒரு வழியாக 'இந்தியன் 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

Published on

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், சுகன்யாவும் நடித்திருந்தனர். மேலும் நடிகை கஸ்தூரி, நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்ததை போல் பட விழாக்களில் விருதுகளையும் வென்றது. இப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப் பட உள்ளதாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கமல் & பிரபாஸ் படத்தின் சூப்பர் அப்டேட்!
Indian 2

கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் பாடல் காட்சி மட்டும் எஞ்சி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலில் இப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடும் ஐடியாவில் இருந்த படக்குழு, புஷ்பா 2 படமும் அதே தேதியை லாக் செய்ததால், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கின்றனர். அதன் படி இந்தியன் 2 திரைப்படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com