கமல் நடிப்பில் இந்தியன் 2, தக் லைஃப் படங்கள் வெளியாக உள்ளன. 2025ல் சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். இந்தப் படங்களுக்கு முன்பாக வரும் மே 9ம் தேதி கமல் பிரபாஸுடன் நடித்திருக்கும் கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகிறது.
வைஜெயந்தி மூவிஸ் தங்களின் 50 வருட நிறைவை கொண்டாடும்விதமாக மெகா புராஜெக்ட் ஒன்றை பிரபாஸ் நடிப்பில் 2020ல் அறிவித்தது. சயின்ஸ் பிக்ஷனும், இந்து புராண நம்பிக்கையும் கலந்து, வருங்காலத்தில் நிகழ்வது போல் இதன் கதை எழுதப்பட்டுள்ளது. 600 கோடி பட்ஜெட்டில், நாக் அஸ்வின் இயக்கத்தில் இப்படம் தெலுங்கு, இந்தியில் தயாராகும் என்று அறிவித்தனர்.
கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 3 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இதையடுத்து சமீபத்தில் 3 நாட்கள் ஷூட்டிங்கில் நடித்துள்ளார்.
இதன் மூலம் கல்கி படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார். இரண்டாம் பாகத்தில் தான் அவருக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் மீதமுள்ள காட்சிகளை இரண்டாம் பாக ஷூட்டிங்கின் போது நடிப்பார் என சொல்லப்படுகிறது. கல்கி முதல் பாகம் மே 9 ஆம் தேதி ரிலீஸ் அகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட் படங்கள் போல 9 பாகங்களாக வெளியாகப் போவதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழு 2 பாகங்களாக வெளியாகும் என்றுதான் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் டீஸரை தயார் செய்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகியிருக்கும் இந்த டீஸரின் ரன்னிங் டைம் 1 நிமிடம் 23 வினாடிகள் என தெரிய வந்துள்ளது.