இயக்குநர் தங்கர் பச்சானின் "கருமேகங்கள் கலைக்கின்றன" உலக நாயகன் கமல்ஹாசன் வெளியீடு!

இயக்குநர் தங்கர் பச்சானின் 
"கருமேகங்கள் கலைக்கின்றன"  உலக நாயகன் கமல்ஹாசன் வெளியீடு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் "கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் கருமேகங்கள் கலைகின்றன. படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களை இயக்குனர் தங்கர் பச்சான் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் படத்தில் நாயகியாக அருவி மற்றும் பாயாசம் ஆகிய படங்களின் நாயகி அதிதி பாலன் இணைந்துள்ளார். இதை அறிவித்துள்ள இயக்குனர் தங்கர் பச்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்துள்ளார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இந்த "கருமேகங்கள் கலைகின்றன” படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொள்கின்றனர். படத்தினை டி. துரை வீரசக்தி தயாரிக்கிறார்.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர் பச்சான். நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான படைப்பாக "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று திங்கள்கிழமை வெளியிட்டார். கமல்ஹாசனின் அலுவலகத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டப்பட்டது. அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர் பச்சான், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். இப்படம் குறித்து பாரதிராஜா, "தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்" என்று கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.

படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், "தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்தபிறகு தான் ஓய்வு பெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் பேசியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தைக் காட்டுங்கள்" என்று இயக்குநர் தங்கர் பச்சானிடம் தெரிவித்தார். மேலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திக்கும் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com