வெற்றிமாறன் கதையில் மீண்டும் சூரி நடிக்கும் ‘கருடன்’ வீடியோ வெளியானது!

Garudan
Garudan
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

வெற்றிமாறன் எழுதிய கதையை ஆர்.எஸ். துரைசெந்தில் குமார் படமாக இயக்கவுள்ளார். நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஃபிர்ஸ்ட் லுக் வெளியானது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வெளியான விடுதலை பாகம் 1 படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுமட்டுமல்லாமல், சூரியின் ஹீரோ கெரியரையும் வளர்த்துவிட்டது என்றே கூற வேண்டும். ஏனெனில் சூரி பல வருடங்களாக நகைச்சுவை நடிகராகவே நடித்துவந்தார். அந்தவகையில் விடுதலை பாகம் 1 லிருந்து ‘நான் ஹீரோ டா’ என்று அழுத்தமாக கூறும் வகையில் அவருடைய நடிப்பு இருந்தது.

அந்தவகையில் சூரி நடிப்பில் விடுதலை பாகம் 2 படமும் கொட்டுக்காளி என்ற படமும் உருவாகி வருகின்றது. இப்படி சூரிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் ஃபிர்ஸ்ட் லுக் கிள்ம்ஸ் இன்று ஐந்து மணிக்கு வெளியானது.

இரண்டு நிமிடங்கள் எட்டு வினாடிகள் கொண்ட இந்த ஃபர்ஸ்ட் வீடியோ கிளிம்ஸின் இறுதியில் படத்தின் தலைப்பு வெளியானது. இப்படத்திற்கு ‘கருடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சூரியின் மிரட்டளான லுக் அவரின் சினிமா வளர்ச்சியில் அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச்சென்றுள்ளது. மேலும் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் 2013ம் ஆண்டு எதிர்நீச்சல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கினார். அதன்பின்னர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 படத்தில் எழுத்தாளராக பணிப்புரிந்தார். அவர் எடுத்தப் படங்கள் அனைத்துமே நல்ல ஹிட் கொடுத்திருக்கிறது.

அந்தவகையில் வெற்றிமாறனின் கதையும் துரை செந்தில்குமாரின் இயக்கமும் சூரியின் நடிப்பும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் சேர்ந்த உருவாகும் இப்படம் தமிழ் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. லார்க் ஸ்டூடியோ & க்ராஸ்ரூட் ஃபிலிம் கம்பேனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு போஸ்டரில் ஒரு நாயின் பாதி பக்கம் இருப்பது போன்ற புகைப்படம் இருந்தது. மேலும் இப்படத்தில் பாரதி கண்ணம்மா தொடரின் கதாநாயகியான ரோஷினி, சமுத்திரக்கனி, ஆகியோரும் நடித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் வெற்றிமாறன் என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com