உனக்காக பிறந்தேனே எனதழகா.. கணவரின் டாட்டூவுடன் பிரேமலதா விஜயகாந்த்!

premalatha Vijayakanth Tatoo
premalatha Vijayakanth Tatoo

ணவரின் புகைப்படத்தை கையில் பச்சை குத்தி கொண்ட பிரேமலதா விஜயகாந்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கேப்டன் விஜயகாந்த் என மக்களால் போற்றப்பட்ட கலைஞர் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் உடலை காண லட்சக்கணக்கில் மக்கள் சென்னையில் குவிந்தனர். இவர்களின் கண்ணீருக்கு மத்தியில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த், உடல் புதைக்கப்பட்டது. விஜயகாந்தி மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.

பல பேட்டிகளில் விஜயகாந்த் மனைவி பற்றி பேசியது உண்டு. அப்படி மனைவியே தெய்வம் என்று அடிக்கடி சொல்லும் விஜயகாந்தின் மனைவி, கணவரின் மறைவுக்கு பிறகு அவரின் புகைப்படத்தை தனது வலது கையில் பச்சை குத்தி கொண்டுள்ளார். விஜயகாந்த் எப்போதும் தன்னுடன் இருக்கும் விதமாக பச்சை குத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பிரேமலதாவின் மகனான விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் இந்த டாட்டூ புகைப்படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
கை, கால்கள் மரத்துப்போவதன் காரணம் தெரியுமா?
premalatha Vijayakanth Tatoo

இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து மிஸ் யூ கேப்டன் என பதிவிட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com