லவ் பண்றவங்கள கல்யாணம் பண்ணாதீங்க – இது சூப்பர் ஸ்டார் அட்வைஸ் சார்!

Rajinikanth
Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படங்களிலும் சரி, நிஜத்திலும் சரி இளைஞர்களுக்கு பல அட்வைஸ் கொடுத்திருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்தவகையில் நடன மாஸ்டர் சாந்தி அரவிந்த், ரஜினிகாந்த் பற்றி கூறிய ஒரு சுவாரசிய விஷயத்தைப் பற்றி பார்ப்போம்.

நடன மாஸ்ட்ராகவும், சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடிகராகவும் இருந்து வருபவர் சாந்தி மாஸ்டர். சமீபத்தில் லியோ படத்தில் கூட சண்முகத்தின் மனைவியாக ஒரு கேமியோ ரோலில் நடித்திருப்பார். இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடனமும் ஆடியிருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார்.

Shanthi master
Shanthi master

அதில் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடனமாடியது குறித்தும், அந்த ஷாட்டின்போது ஒரே போஸில் இருக்கும்படி இருந்தது குறித்தும், அப்போது நாங்கள் சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்றும் கூறினார். அப்படி என்ன பேசினார்கள் என்பதை பகிர்ந்துக்கொண்டார் சாந்தி.

“ரஜினி சார், சாந்தி நீ யாரயாவது லவ் பண்றீயான்னு கேட்டாரு… நான் ஏன் சார் இப்டி கேக்குறீங்கன்னு கேட்டேன். அதற்கு அவர் சும்மா சொல்லு கேப்போம்ன்னு சொன்னாரு. நான் ஆமா சார்ன்னு சொன்னே.

லவ் பண்றவங்கள கல்யாணம் பண்ணிக்கக்கூடாது என்று டக்குன்னு சொல்லிட்டாரு. என்ன சார் இப்டி சொல்டீங்கன்னு கேட்டேன். ஆமா சாந்தி, லவ் பண்றவங்கள கல்யாணம் பண்ணிக்கூடாது. வேற யாரயாவது பண்ணிக்கனும்.

இதையும் படியுங்கள்:
சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்காக காத்திருக்கும் ட்ரீட்... என்ன தெரியுமா?
Rajinikanth

ஏனா… அப்போதான் அந்த லவ்வர நாம மறுபடியும் பாக்கும்போது வயித்துல ஒரு ஜில் ஃபீலிங் வரும். அப்போ அந்த லவ் வாழுதுன்னுதானே அர்த்தம். செத்துப் போகலலன்னு சொன்னாரு. நான் உடனே கேட்டேன்.. சொல்லுங்க சார், நீங்களும் அப்டிதான் பண்ணிருக்கீங்களான்னு… உடனே அவர் ஆமா என்பதுபோல ஆன்..ஆன்… என்று சொல்லி மழுப்பினார்.

என்று சாந்தி அந்த பாடல் படப்பிடிப்பின் ஜாலியான மொமென்ட்டை பகிர்ந்துக்கொண்டார்.

இதனை ப்ரேக்கப் இளைஞர்கள் புரிந்துக்கொண்டால், மனதுக்கு சற்று ஆறுதலாவது கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com