ஒரே நடிகருக்கு மகள், மனைவி, தாயாக நடித்த மீனா... யார் தெரியுமா?

meena
Meena
Published on

சினிமாவில் பல வித்தியாசமான ஜோடிகள் அமைந்திருந்தாலும், சில ஜோடிகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின்னாளில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித், சத்யராஜ், பிரபு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் மீனா. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மீனா, அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதேபோல், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மீனா, எங்கேயே கேட்ட குரல் படத்தில் ரஜினிகாந்தின் குழந்தையாக நடித்திருப்பார். விஜயகாந்த் நடித்த பார்வையின் மறுபக்கம், சிவாஜி கணேசன் நடித்த சுமங்கலி, திருப்பம், சிவக்குமார் நடித்த, தீர்ப்புகள் திருத்தப்படலாம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், மோகன் நடித்த உயிரே உனக்காக உள்ளிட்ட படங்களில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், ஒரு நடிகருக்கு மட்டும் நடிகை மீனா மகள், காதலி, தாய் என 3 விதமான கேரக்டர்களில் நடித்துள்ளார்.

அவர் யார் என்று தெரியுமா? வேறு யாருமல்ல, மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டி தான்.

1984 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கொச்சு கதை நெய்ய பரியாத கதை' என்ற படத்தில் மீனா, மம்முட்டியின் மகளுக்கு சமமான கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பின்னர், 2014-ம் ஆண்டு வெளியான 'பால்யகலசகி' படத்தில் மம்முட்டியின் தாயாக நடித்து அசத்தினார். இதே படத்தில், மம்முட்டி, மீனாவின் கணவராகவும் நடித்தது கூடுதல் சுவாரசியம். மீனா, மம்முட்டியுடன் 'ராட்சச ராஜா', 'கருட பக்ஷிகல்', 'கதா பரியம்போல்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, 'ராட்சச ராஜா' படத்தில் மம்முட்டியின் காதலியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

இது குறித்து மீனா ஒரு பேட்டியில் கூறுகையில், "யாரும் சொல்லாத ஒரு சிறிய கதை' பாடலின் ஒரு பகுதியை எனக்குக் காட்டி, இது எனக்கு நினைவிருக்கிறதா என்று என்னிடம் கேட்டார்கள். அப்போது எனக்கு நினைவில் இல்லை என்று சொன்னேன், ஆனாலும் அந்த காட்சி நன்றாக இருந்தது. இதில் என் தந்தையாக நடித்திருந்த மம்முட்டிக்கு பின்னாளில், நான் அவரின் தாயாக நடித்தேன். உண்மையைச் சொன்னால், இதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது," என்று மீனா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அரசியால் அவமானப்பட போகும் பாண்டியன்…. இப்படி பண்ணிட்டாங்களே!
meena

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com