1974ம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர்க்கதை படத்தில் கமல் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்று பார்ப்போமா?
1974ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்க்கதை படத்தில் கமல், ஸ்ரீ பிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் வரும் தெய்வம் தந்த வீடு பாடல், கடவுள் அமைத்து வைத்த மேடை போன்ற பாடல்கள் இன்றளவும் மக்களுக்கு பிடித்தவையாக இருந்து வருகின்றன. அந்தவகையில் இந்தப் படத்தில் ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தார் பாலசந்தர்.
அப்போது அவருக்கு எர்ணாகுளம் படத்தில் 2 பீஸ் உடையில் நடித்த சுஜாதாவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. தனது படத்துக்கு இவள் தான் கதாநாயகி என்று முடிவு செய்தார். அதன்படி பேசி நடிக்க வைத்தார்.
அவர் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குநர் அவரை மிகவும் திட்ட, அதற்கு அந்த நடிகை தேம்பி தேம்பி அழுதாராம். இதன்பின்னர் அவர் நடித்த அத்தனை காட்சிகளும் பாலசந்தரே வியக்கும் அளவிற்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதேபோல்தான், மற்றொரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்தார். விகடகவி கோபால் ரோலில் நடிக்க ராஜேஷைத் தேர்ந்துதெடுத்தார். அப்போது அவர் வாத்தியராக இருந்தார். நல்ல தமிழ் பேசுவார். ஆனால் அந்தப் பாத்திரத்துக்குப் பொருந்துவாரா என்ற சிந்தனை அவர் மனதிலே இருந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் யாரை நடிக்க வைக்கலாம் என சிந்தித்துக் கொண்டே இருந்தார் பாலசந்தர்.
அப்போது ஒருநாள் கஸ்தூரி ரங்கன் சாலையில் காரில் பாலசந்தர் சென்றுக்கொண்டிருந்தார். அதே சாலையில் கமல் நடந்துப் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தார். அடடே இவனை மறந்துவிட்டோமே என்று நினைத்து கமலை சந்தித்து நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
3 நாளில் திட்டமிட்டு அந்தப் படப்பிடிப்பை நடத்தி முடித்தார் பாலசந்தர். இதனால், பெரிய அளவில் லாபம் கிடைத்ததாக தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். இந்த குறைந்த நேரத்தில் படப்பிடிப்பை முடிக்கவில்லை என்றால், கட்டாயம் நஷ்டம் அடைந்திருக்கும் என்றும் கூறினார்.
இந்தப் படத்தின் 100வது நாள் விழாவுக்கு பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூர் வந்து இருந்தார். முன்னர் இதுபோன்ற ஒரு பாராட்டு விழாவில் சத்யஜித்ரேவை சந்தித்துள்ளேன். இப்போது இன்னொரு மேதை பாலசந்தரை சந்திக்கிறேன் என்று கூறினாராம்.