சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் எப்போது வெளியாகும் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின்  ஜெயிலர் படம் எப்போது வெளியாகும் தெரியுமா?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் . இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் , நடிகை ஆத்மிகா, தமன்னா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் மங்களூருவில் ரஜினி – சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அதன் படி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்திலும், இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அத்துடன் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com