'Project K' படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

'Project K' படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
மும்பை மீனலதா

வணக்கம். ஆர். மீனலதாவாகிய அடியேன், என்னைப் பற்றிய சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். **சிறு வயது முதலேயே, என்னுடன் ஐக்கியமான எழுத்து, நடிப்பு, பேச்சு, பாட்டு, விளையாட்டு, பிறர்க்கு உதவுவது, புது மாதிரியாக யோசித்து ஆர்வத்துடன் செயல்படுவது போன்ற பல செயல்கள், சீனியர் சிட்டிசன் ஆன பிறகும் தொடர்கிறது. (சகலகலாவல்லி என்று அநேகர் என்னைக் குறித்து கூறுவதுண்டு😊) **கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். **தமிழார்வம் கொண்டவள். **அனைத்தும் டிஜிட்டல் மயமாக ஆனபோதிலும், எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, எழுதுவதை அதிகம் விரும்புபவள். **கட்டுரை, நேர்காணல், சிறுகதை, சமையல், மோட்டிவேஷன், நகைச்சுவைக்கதை போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து எழுதி வருகிறேன். **பத்திரிகைகள் அளிக்கும் ஆதரவு, புது விஷயம் எழுத அளிக்கும் தூண்டுதல், அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் அருமையான டிப்ஸ் ஆகியவைகள் எனது எழுத்தினை மேன்மேலும் மெருகூட்ட மிகவும் உதவியாக உள்ளன.

Updated on: 

மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படமான 'Project K' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளிலும், பிரம்மாண்டமாக உருவாகும் 'Project K' படத்தை நாக் அஸ்வின் எழுதி, இயக்கும் நிலையில், இப்படம் science fiction படமாக உருவாகிறது.

இவர்களுடன், தீபிகா படுகோனே, திஷா பதானி நடிக்க, டானி சான்செஸ்-லோபஸ் ஒளிப்பதிவு செய்ய, வைஜயந்தி மூவிஸ், அஸ்வானி தத் தயாரிக்கிறார். இப்படம் 500 கோடி பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்திற்கான இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார்.

அதன்படி, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அதைத்தாண்டி இவரது இசையில் தெலுங்கில் 3 படம், மலையாளத்தில் 2 படம், இந்தியில் 1 படமும் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இவரது பின்னணி இசையில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘Project K’ படம் 2024ம் ஆண்டு பொங்கல் சமயம் வெளிவர உள்ளது.

மேலும் இப்படத்தில், பாலிவுட்டைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞர் ஒருவரும் இணைய இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இப்படத்தின் தயாரிப்பாளர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com