குழந்தைகளிடம் மூடநம்பிக்கைகளை விதைக்காதீர்கள் – அரவிந்த் சாமி!

Arvind Swamy
Arvind Swamy
Published on

நடிகர் அரவிந்த் சாமி குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தர வேண்டும், என்ன சொல்லித்தரக்கூடாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக கடவுள் மற்றும் மூட நம்பிக்கைகள் குறித்து பேசியிருக்கிறார்.

நடிகர் அரவிந்த்சாமி என்றாலே ரோஜா படம்தான் ஞாபகத்திற்கு வரும். அப்போது தொடர்ந்து காதல் படங்களில் நடித்து பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. ஆனால், சில ஆண்டுகள் இவருக்கு நல்ல படங்கள் வராததால் சினிமாவில் ஃபார்ம் அவுட் ஆனார். மீண்டும் இவருக்கு கம்பேக்காக அமைந்த படம்தான் தனி ஒருவன் படம். அதுவரை காதல் மன்னனாக இருந்த அரவிந்த்சாமி, அந்தப் படத்திற்கு பின்னர் தரமான வில்லனாக மாறினார்.

அப்படத்திற்கு பின் ரசிகர்கள் மனதில் தனி ஒருவன் வில்லனாகவே பதிந்துவிட்டர். அதன்பின்னர் மீண்டும் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை.

அந்தவகையில் சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்தின்மூலம் ரசிகர்களின் மனதை வென்றார். கார்த்தி அரவிந்த்சாமி காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வில்லனாகவும் இல்லாமல் காதல் மன்னனாகவும் இல்லாமல் ஒரு மச்சானாகவும் அண்ணனாகவும் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தவகையில் சமீபத்தில் இவர் அறிமுகம் செய்த ஒரு புத்தகம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், இந்த பிரபஞ்சத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன. அதில் நாம் எல்லாம் அணுவை விட சிறியவர்கள் என்பதுபோல பேசியிருப்பார். இது இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்:
கொலைகாரனை கொல்ல துடிக்கும் காமெடிக் குடும்பம்!
Arvind Swamy

இதனையடுத்து இறை நம்பிக்கை குறித்து அரவிந்த்சாமி பேசியதைப் பார்ப்போம். “குழந்தைகளுக்கு கடவுள் இருக்கார்னு சொல்லுங்க, ஆனா பூஜை பன்னலனா தண்டிப்பார், பிள்ளையார் சுழி போடலனா பரீட்சையில் தோத்து போய்டுவ, கடவுள் கண்ண குத்துவார்னு சொல்லாதீங்க. குழந்தைகளுக்கு நம்பிக்கை இருக்கலாம். மூட நம்பிக்கை கூடாது. கடவுள்னா நல்லவர்தானே அவர் ஏன் பூஜை பண்ணலனா தண்டிக்கனும்?” என்று அரவிந்த்சாமி நறுக்கென்று பேசினார்.

இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com